பக்கம் எண் :
 
New Page 1

    பொருமை பற்றிய ஆரீறே கொள்க; என்னை?  ‘அர்’ வினையில்
பன்மையாகலின் (வந்தார் (கள்) வந்தனர்.)

304. நூ: கள்பெறும் பலர்பெயர் கள்ளிறு வினைபெறும்.

    பொ: சிறப்பொருமையால் ஆர் இறுதி ஒருமையைக் குறித்ததன்பின்
கள் சேர்ந்து பலரைக் குறிக்கும் பெயர்கள் பன்மையினோ, மீண்டும்
அடைந்த மதிப்பொருமையினோ வரின் வினையும் கள் பெறும் என்பது.

    இந்திரா காந்தி அவர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள்.  ஆசிரியர்கள்
பணி நிறுத்தம் செய்தார்கள். இவ்வாறு கள் பலர்பாலுக்கன்றிப் பலவின்
பாலிற்கும் ஏற்ற நடந்த முயற்சி தோற்றது;-

    செய்வனகள் (திருப்பாவை)
    மரங்கள் விழுந்தன.

305. நூ: ஆரீறு ஒருமைமேல் ஊர்ந்துயர் வேற்றும்

    பொ: ஆர் என்னும் மதிப்பொருமை ஒருமை இறுதி வாய்ந்த
பெயர்மேல் ஊர்ந்து உயர்த்திக் காட்டும்.

    சா: பரிமேலழகியார்
        பாரதியார்
        அ. சிதம்பரநாதனார்
        மா. இராசமாணிக்கனார்
        சதாசிவப்பண்டாரத்தார்.

    என உகர இறுதி, னகர இறுதி, மகர இறுதிப்பின் ஏறி வருதல் நோக்கிப்
பிறவும் தேறியுணர்க.

        மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
        மறைமலையடிகளார் மகளார் நீலாம்பிகையார்.

எனத்தொடர்வதும் கொள்க.

    அன்றியும், கரடியார் என அஃறிணை ஒருமையில் வருவது
கதையிலாம்.  மாதரார் எனக் கூறுவதில் மாதர் - ரகர இறுதியாய் (மாதர்
காதல் - தொல்) வருதல் பண்படிப் பெயர்மட்டே.

306. நூ: ஒருவள் என்பது ஒருத்திக்கீடே.

    பொ: ஒருவள் என்பது இலக்கிய வழக்கின்றேனும் ஒருத்தி என்னும்
பொருட்குறிப்புக்கு நேரானதே.

    சா : ஒருவள் என்னும் வழக்கை மறுப்பது பழங்குருட்டுத்தனமே.

    ஒருத்தி மகனாய்ப்பிறந்து (திருப்பாவை) ஒருவள் (பாவேந்தர்).