314. நூ: ஒருமுன் கால்எனும் காலத் திரிபெயர்
வருகால் மிகுமேல் ஐயப் பொருளாம்
மிகாதேல் ஒருபோ தெனும்பொருள் இயல்பே.
பொ:
ஒரு என்னும் எண் திரிபு உருமுன் காலத் திரிபெயர்ச்சொல் வந்து நின்று, வலிமிகுமேல் ஐயப்பொருள்
காட்டும்; ஒற்று மிகாதேல் ஒரு போதென்னும் இயல்புப் பொருள்படும்.
சா:
ஒருக்கால் நான் வராவிட்டால் (ஐயம்); இன்னொருக்கால் வரும்போது உண்பேன் என்புழி முறை-என்னும்
பொருளுறுதலை இயல்பில் அடக்குக. ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் (இயல்பு).
315. நூ: செய்யுமுன் என்பதைச் செய்யா முன்னெனச்
செய்வதற் குள்ளெனச் சொலல்வழு வமைதி.
பொ :
செய்யுமுன் அல்லது செய்வதன்முன் என்று குறிக்க வேண்டுவதைச் செய்யாமுன் செய்வதற்குள் என்னும்
வாய்பாடுகளான் கூறுவது வழுவாயினும் பெருவழக்காகலின் அமைதியாம்.
‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’ - செம்மை.
|
முக்காலுக்
கோமுன் முன்னரையில் வீழாமுன்- |
} |
|
அக்காலரைக் கால்கண்டஞ்சாமுன் - |
என்பன வழுவமைதி. |
விக்கி இருமாமுன் (காளமேகம்) |
|
நான் வருவதற்குள் எழுதிவிடு - வழக்குத்தொடர் அமைதி. வீட்டுக்குள் எனப்பெயர்ப்பின் நான்கனுருபும்,
ஏழுனுருபும் சேர்ந்து வீட்டுள் எனக் குறிப்பதை ஈண்டே அமைக்க.
316. நூ: செய்யுமென் எச்சமும் முற்றும் ஈற்றயல்
உயிர்மெயும் உயிரும் ஒழிதலும் உண்டே.
பொ:
செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும், வினைமுற்றும், ஈற்றயலில் உயிர்மட்டோ உயிரொடு
மெய்யுமோ நீங்கிவிடுவதும் உண்டு.
போம்பொழுது; வாம்புரவி-தாயொடு அன்புபோம்; தந்தையொடு கல்விபோம். ஈற்றயல் உயிர்மெய்
கெட்டன. (ஆம்) கலுழ்மே: கேள்(ண்)ம்: என உயிர் கெட வருதல் இரண்டாய் வைத்த முற்றிற்கேயாம்.
(424) இருந்தொழுவர் மிசைப்பாயுந்து; (396) கீழ்நீரால் மீன் வழங்குந்து என எச்சமும், முற்றும்
(செய்யும்+து) துப்பெறுதல் தொல் பழவழக்கென்க. மிசைப் பாயுந்து எச்சமாதலைப் பெயரெச்ச அடுக்காய்
இறுதியில் வரும் பாயும் - நல்லூர் என்பவற்றான் அறிக.
|