பக்கம் எண் :
 
New Page 1

    மேல் விசிறியைப்போல, இகரத்தை மேற்சுழித்தும், ஆய்தப் புள்ளி
எனப்படும் ஆய்தம் முக்கூட்டாக மூன்று சிறுவட்டச் சுழிகளிட்டும்
எழுதப்பெறலாம்.

    வி: இவ்வோரெழுத்தால் தமிழெழுத்தே பிராமித் திரிபு என்ப தொழியச்
சிறு திருத்தம் வேண்டிற்று. ஆய்தத்தை முப்பொட்டுப் புள்ளியிட்டுக்
குறித்தல் கணக்குக் குறியாய்ப்பயனுறலானும், நச்சினார்க்கினியர் இவ்வாறு
(தொல் - 2 - உரை) குறித்தலானும் ஆய்தத் திருத்தம் கூறியது.

    நுதலுரை: இந்நூற்பாமுதல் ஏழுநூற்பாக்களில்
கூறப்படும்வடிவெழுத்துகள் பற்றியகருத்து இற்றை அச்சுவாய்ப்பிற்கு
தமிழெழுத்து பல்கியிருத்தல் எல்லாரும் அறியக்கிடத்தலின் அவற்றிடை
வேண்டும் மாற்றம் கூறுதல் நுதலிற்று.

38. நூ: ஒளஊ உயிரின் ளப்போல் துணைக்குறி
       ஒன்றைக் கொம்பும், காலும் ஒன்றிய
       பெற்றித் தாமே; பிரித்திடல் நன்றே.

    பொ: ஊ என்னும் உயிர் எழுத்திலும், ‘ஒள’ வுயிரிலும் அஃது ஏறும்
உயிர்மெயிலும் அமையும் ‘ள’ப்போன்ற துணைக்குறி முன்னம் ஒற்றைக்
கொம்பும்காலும் இணைந்து அமைந்த தன்மையுடையது.  அதனை இக்கால்
‘ள’ கரத்தினின்று தெளியப் பிரித்து எழுதுவதே நல்லது.  ஊ  >  உª£;
ஒள  > ஒª£; கௌ > கெª£

39. நூ: ஆகா ரத்தின் கீழ்விலங் குக்குறி
       னாணா றாஎன மூன்றிற் கேறிக்
       குழப்பு வதிலும்அந் நான்கையும் மாற்றி
       இடப்புறம் காலிடல் எளியநன் மாற்றமே.

    பொ: ‘ஆ’ உயிர்நெடிலின் கீழ்வளைவுக்குறி B Z A என்னும் மூன்று
எழுத்துக்களின் வாய்ப்புக்கியைய உயிர் போல் அமைய, பிறபதினைந்து
எழுத்துக்களும் கால்பெற்றுக் குழப்புவதை விடப்பெரும்பான்மை நோக்கி
அந்நான்கிற்கும் காலிட்டெழுதுவது எளிய நல்ல மாற்றமே அன்றோ.

    சா: B - னா; Z - ணா; A - றா; ஆ -அ£.

உயிரெழுத்தையும் மாற்ற வேண்டுவது - அவ்வாறு ஓரெழுத்துருவம்
குறைவதனாலும், உயிர் எழுத்துகட்கும் உயிர்மெய் எழுத்துகட்கும் ஒருருவ
இயைபு இருத்தலினாலும் என்க.

    ஒகர, ஓகார உயிர்மெய்யாங்காலும் இவ்வகை தொடர்க.  றொ, னொ,
ணொ, றோ, னோ, ணோ.