345. நூ: பேம்உரும் இரண்டும் அச்சம் காட்டும்.
சா: பேய்: உருமநேரம் (உருமனார் - உச்சிக்கிழான்) இவை முதல் திரிந்த தனிச்சொல் வழக்கினவே.
நாமநீர் - (குறள்) என நாம் அச்சப்பொருள் தருதல் தொன்மையினும் சின்மையே.
346. நூ: நம்பும் மேவும் அமர்தலும் நசைமுன்;
நம்பு தெளிவும், மேவல் அடைதலும்;
அமர்தல் இருத்தலும் அமைந்தின்று கூட்டும்.
பொ: நம்பு, மே, அமர்வு மூன்றும் விரும்பற்பொருள் விளைத்தது பழமை. அவை இன்று நம்புதல் எனத்
தேற்றல் பொருளும் மேவினான் என அடைதற் பொருளும், அமர்ந்தான் என உட்கார்தற் பொருளும்
விளையக் கூட்டும்.
சா: நம்பி-விரும்பத்தக்கான் (நம்புகை - நம்பிக்கை)
ஒப்பு - தும்புக்கை - தும்பிக்கை)
மேவ-மேவன செய்தொழுகுவார் (குறள்)
(அகம்) அமரியமுகம்-விரும்பியமுகம்.
இக்கால் பொருளை வழக்கறிந்துணர்க.
347. நூ: ஐயே தலைமை வியப்பு தண்மை:
பொ: ஐ-முப்பொருள் தரும்.
சா: ஐயன்-ஐயப்பன்-ஐயனார்
ஆடுகோ-சூடுகோ ஐதாக் கலந்துகொண்(டு)
ஏடு கோடாக எழுதுகோ(முத்தொள்ளாயிரம்)}
ஐயர்-அந்தணர் என்போர் அறவோர்.
348. நூ: கல்வேர் கருமையும் கறுப்பும் வண்ணம்.
பொ: கல் என்னும் வேரடியாகத் தோன்றிய கருமையும், கறுப்பும் இன்று வண்ணம் செய்யும்.
சா: அ. கல் - க(ர்)ரு - கார் - முகில் - கருமை - வண்ணம். கல்லால் நிழல் - (சிவஞான
போதம்).
கரி - யானை, நிலக்கரி
கரிது - கரியது
கரவு - மறைத்தல் - கரி (மறைவுரைக்கும் சான்று).
|