ஆ. கல் - கள் - காள் - காளி (கரியவள்) (இஃதொரு
தனிக்கிளை.)
காளம் - காளமேகம்.
கருமை - கறுப்பு வேறுபாட்டுக் கட்டுரையொன்று பாவாணரால்
தமிழ்ப்பாவையில் எழுதப்பட்டதை அறிந்தும்
காண வாய்ப்பிலன்
இந்நூலாசிரியன்.
இ. கல் - கல்லுதல் - தோண்டுதல் - கல்வி (தொட்டனைத் தூறும்)
கல் - கறித்தல் - கடித்தல்
- கறி - மான்கறி - காய்கறி: மலைகல்லி எலி பிடித்தல். (இது வேறு வழி).
ஈ. கல் - கல்+து=கறு - கறுப்பு (தவல் - தவல்+து=தவறு)
கறி - கருமிளகு.
கல்தோன்றி (கருமலை)
கறுத்தின்னாச் செய்தவக் கண்ணும் (குறள்) எனத் தொல்காப்பியம்
கூறியாங்கே சினப் பொருள்படல்
கருமுகம் மேலும் சினத்தில் கறுத்தலான்
போலும்.
இதனானன்றே செம்முகம் சினத்தில் சிவத்தலான் அதையும்
சினக்குறியாய்க் கூறியது. (கறுப்பும்
சிவப்பும் வெகுளிப் பொருள்-தொல்).
349. நூ: கடியென் சொற்கு விரைவும் மணமும்
நடைமுறைப் பொருளே; பழம்பொருள் பலவே.
பொ: கடியென்னும் சொல்லுக்கு விரைவும், மணமும் நடைமுறைப்
பொருளாகும். பழம் பொருளாக இலக்கண
நூல்கள் மேலும் பல கூறும்.
சா: |
காரெனக் கடிது சென்றான்(கம்ப) |
| |
கடிமரம் - (காவல்மரம்)
முதல் பழம்பொருள் மேலும் பத்துக் கூறுவதைப் பழநூலுள் காண்க. |
|
கடிதாகப் போ - வழக்கு |
|
கடிகமழ்தார் - மணத்தல்
|
கடிகால் என்று பாரவண்டியின் குத்துக்கழியைக் காப்புப் பொருட்டுக்
குறித்தல் சிறுவழக்கு.
கடிநூற்குப்பொன் |
- |
(மங்கலநாண்) உரை. |
கடிமணம் |
- |
(பெ.பு.) ஒரு பொருட் பன்மொழி. |
கடுப்பு |
- |
கடுகடுத்தல் - எனச் சினஞ் சுட்டுவது கடுமை என்னும் பண்படிச்சொல். |
|