40. நூ: மெய்யோ டைப்புணர் வுறவரும் முன்குறி
மெய்யாய் ஒருசுழிக் கொம்பிரண் டிணைந்ததே;
முன்சுழி யுடைய னணலள நான்கும்
பின்வழி யினரால் திரிபுருப் பெற்றவே.
பொ:
மெய்யெழுத்தோடு ‘ஐ’ புணர வரும் உயிர்மெய்உருவில்
அமையும் இரட்டைச்சுழிக் கொம்பு உண்மையில்
இரண்டு ஒருசுழிக்
கொம்புகள் இணைந்ததே. இதனோடும் ன, ண, ல, ள - என முன்பு
சுழியுடைய இந்நான்கெழுத்துகளும்
பின் வந்தோரால் திரித்து
எழுதப்பெற்றனவே.
எனவே எழுத்தெண்ணிக்கைச் சுருக்கம் நோக்கி முன்வழங்கிய உண்மை
உருப்பட எழுதுவதே சாலும் என்றவாறு
ªª = ¬.
ஹ >
னை;
ஸ்ரீ >
ணை;
ஜ-லை;
க்ஷ-ளை;
மேல்வரி வடிவ உண்மைகள் (தொல். 17) உரையாசிரியர் உரையினின்று
உன்னி உணர்ந்தவாறு சொல்லப்படுகிறது.
கல்வெட்டுக் கிடைப்பின்
சான்றமையும்.
41. நூ: எதிர்கா லத்தின் முதிர்கோ லத்தில்
ஐஒள என்னும் உயிரும் அதன்வழி
உயிர்மெயும் அற்றுப் போதல் ஒக்குமே.
பொ:
எதிர்காலத்தில் அறிவு முதிர்பொழுது எழுத்துச் சீர்
திருத்தப்போக்கில் ஐ, ஒள என்னும் இரண்டு
உயிர்எழுத்துகளும் ஒழிய,
அப்படியே அவற்றால் தோன்றும் உயிர்மெய் முப்பத்தாறும்
அற்றுப்போவதாதல்
பொருந்தும்.
ஐ, ஒள என்பன அஇ, அஉ என்னும் கூட்டொலியே ஆதலானும்,
இக்கால் அது, அய்; அவ் என்றே எழுதப்பொருந்துவதாலும்
எழுத்துக்
குறைப்பிற்கு அவற்றின் நீக்கம் ஆக்கமே என்றவாறு. உயிர்மெய்
எழுத்தையும் - கய்,
கவ் என்றே எழுதத்தகும். இம்முறை பண்டை
நூல்களிலும் ஆங்காங்கே விரவியுள.
42. நூ: உஊ உயிரியை ஆறா றுயிர்மெய்
மூவகைத் திரிபுருப் பெற்று முடியும்
அமைப்பு நோக்கின் வியப்பு மிகுமே.
பொ:
உ; ஊ என்னும் இரண்டுயிரும் பதினெட்டு மெய்யில்
ஏறத்தோன்றும் முப்பத்தாறு உயிர்மெய்களும் மூன்றுவகையான
திரிபமைப்புகளில் முடியுமாறு முன்னோர் அமைத்துள்ளமை கருதி நோக்கின்
அவர் நுண்மாண் நுழைபுலம்கண்டு
வியப்பே எஞ்சுவதாம்.
|