பக்கம் எண் :
 

    சா: கண்+டு=கட்டு; உள்+து=உண்டு.

    மக்கட்டு: துகரம் டுகரமாய் மாறுவதை (செம்மல்=து) உறுப்பியலில்
கூறியவிடத்து அதனின்சேராது விடுத்தது டுவ்வீறு இத்தன்மையாய் மட்டும்
வருதலான் இஃது அஃறிணை ஒருமையின் உருவங்காண உதவலின் ஈண்டுக்
கூறப்பட்டது.

356. நூ: ‘அ’ எனும் பன்மை இறுதி அமைவதோ
        பலசில பிறபோல் பாங்கே என்க.

    பொ: மேல் எழுந்த வினாவில் அகர இறுதி பல, சில, பிற
என்பவற்றைப் போலப் பாங்காய் அமையும் என்க.

    சா: பலவற்றை, பிறவற்றில் என்பனபோல அரியவற்றுள் எல்லாம்
அரிதே (443) என வேற்றுமை உருபேற்று வெளிப்படையாகவேதான்
பெயராதலைக் காட்டுவதுணர்க.

357. நூ: எச்சமாய் வருவதும் அவற்றோ டொக்கும்.

    பொ: வினையெச்சம், பெயரெச்சமாய் வருவது மேற்கூறியவாறே ஒத்தடங்கும்.

    சா: நல்ல பையன்; நோக்கு வல்ல கழுகு; பெ. எ. (செய்த) வெளிய
கொக்கு; கரிய காக்கை; என வினை வருதலே மிகுதி.  ‘மெல்லக்கொடு’ என
வினையெச்சமாய் வருவது சிலவே.  ஒக்கும் என்பதனான் பெயரெச்சத்து
வல்லொற்று மிகாமையும், வினையெச்சத்து மிகுவதும் கொள்க: எச்சமாய்
எனப்பொதுப்படக் கூறியவதனான் ‘முற்றெச்சம் ஆதலை ஈண்டுக்
கொளலாம்’ ‘கண்ணேம்-தொழுதுநிற் பழிச்சி’ (மு.வி.எ.) பெருவரை மிசையது
நெடு வெள்ளருவி (மு.பெ.எ.)

    மெல்ல என்பது செய எச்சத்தைப்போல் பிறவினை கொளாது செய்யிய
என்னும் தொல்வழக்கு வினையெச்சத்திற்கும் ‘ஓடிய’ என்னும்
செய்தவாய்பாட்டுப் பெயரெச்சத்திற்கும் வேறுபாடின்மை போலும் அடைச்சிய
(பொ.க.தொ.) ஈதொன்றென்க.

358. நூ: பெயரில் உருபேற் றிடும்வினை புகுங்கால்
        வினையால் அணையும் பெயரென் றமைத்தாங்குப்
        பெயரில் கால உணர்ச்சிப் பெயரைக்
        குறிப்பு வினையெனக் கொண்டனர் போலும்.