[நேர்ந்த மொழிப்பொருளை நீக்க வருநகரம்
சார்ந்த துடலாயின் தன்னுடல்போம்-சார்ந்ததுதான்
ஆவியேல் தன்னாவி முன்னாகும்; ஐஒளவாம்
மேவிய ஏஓவும் விரைந்து (நேமிநாதம்).
இஃது வடமொழி எதிர்மறை பற்றிய மெய்ப் புணர்ச்சியைக் கூறுகிறது.
ஒரு சொல் முன்னோர்ந்த பொருளை நீக்கி எதிர்ப்பொருள் தரவரும்.
நகரம் தான்முன் ஒட்டுவதன்
முதல் மெய்யாயின் தன்மெய் குன்றி அகர
உயிர் மட்டாய் நிற்கும். தான் சார்ந்தது உயிர் முதலாயின்
தன்உயிர் முன்
நிற்க நகர ஒற்று அவ்வுயிரோடு கலக்கும். மொழி முதல் ஐ ஒள வாகவும்,
ஏ-ஓ
வாகவும் விரைந்து மாறுதலும் உண்டு.
அபயன்: அநீதி; அயோக்கியன்
அநங்கன், அநாதி; அநாவசியம்
சேனை - சைன்யம்; கேவலம் - கைவலியம்
கோசலம் - கௌசலை; கோதமம் - கௌதமன்.
இவை இம்மொழியின் உள்ளியல் ஒட்டிய புணர்வாய்ச் சில வழக்கும்,
பல மணிப்பவளத்தும் காணக்கிடத்தலின்
தனி விதி கூறிலம்.]
380. நூ: பரந்த உலகின் விரிந்த சொற்களைப்
பொருந்த நோக்கித் திருந்தக் கொளலே.
பொ: இப்பரந்த உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளின் விரிவுடைச்
சொற்களைத் தமிழ்க்குப்
பொருந்துமாறு நோக்கித் திருந்துமாறு
அமைத்துக்கொளல் வேண்டும்.
முன்னைய வழக்கும் நோக்கிப் புதுமைப்படுத்தலாம்.
சா:
Adam
- ஆதாம்;
Eve
- ஏவ் (ஆள்) ஏவாள். என்றும்,
தமிழ்மொழியாளரும் தயங்கும் - தாமஸ்
(தாமசு) தோம் (தோமையர் -
செயிண்ட் + தோம் - சாந்தோம்). ஜோசப் - (சோசப்பு) சூசை -
வளனார்
(வீ. மு.) என்றும் மொழிபெயர்த்த முன்னோடியரைக் காண்மின்.
மற்று - வால்மீகி + அல்பம் = வான்மீகி, அற்பம் எனத் தமிழ்ப் புணர்ச்சி பெற்றதும்-
|