390. நூ: பயனிலைப் பொருளை நிரப்ப இடையே
பிறவேற் றுமையின் உருபடை சொற்களும்
குறைவினைச் சொற்களும் குறிப்பட வரவும்
செயப்படு பொருளைத் தனிப்படச் சொல்வது
எழுவாய் பயனிலை போலப் பல்வகை
அடைமொழி பெற்று நடையிட லாலும்
தொடர்நடு ஆணியாய்த் தோன்றுவ தாலுமே.
பொ: எழுவாயில் தொடங்கிய தொடரை
முற்றுவிக்கும் பயனிலையின்
பொருளை விரித்து நிரப்பும்படி இடையில் இரண்டனுரு பன்றிப்
பிறவேற்றுமை
உருபடைந்த சொற்களும், எச்சவினைச் சொற்களும் தொடர்
குறித்து வரினும் செயப்படுபொருளை மட்டில்
தனிப்படுத்தி எல்லா இலக்கண
ஆசிரியர்களும் கூறுவது எழுவாய்ப் பெயர்வினைப் பயனிலைபோல அடைச்
சிறப்புச் சொற்களைக்கொண்டு நடப்பதாலும், தொடரின்நடுப் பதிந்த
ஆணியாய்ப் பொருள் அமைந்து
தோன்றுவதாலுமே என்க.
சா: பழந்தமிழர், வாழ்வை இயற்கையொடு சுவைக்கு உலகியலின்
செலுத்தி அறத்தினது முகட்டின்கண் நின்று.
‘உலகே வாழி!’ என வாழ்த்தி
நனிசிறக்க வாழ்ந்தனர்.
இது செயற்கைத் தொடரேனும் தமிழ்த் தொடர் உறுப்புகள் தோன்ற
அமைக்கப்பட்டது.
பழந்தமிழர் வாழ்ந்தனர். |
வாழ்வைச் செலுத்தி வாழ்ந்தனர். |
இயற்கையொடு வாழ்ந்தனர். |
உலகியலின் செலுத்தி வாழ்ந்தனர். |
நனிசிறக்க வாழ்ந்தனர். |
சுவைக்கு வாழ்ந்தனர். |
அறத்தினது முகட்டின்கண்
நின்று வாழ்ந்தனர். |
உலகே வாழி என வாழ்த்தி
வாழ்ந்தனர். |
காதலியைக் கொண்டு கவுந்தியொடுகூடி
மாதரிக்குக் காட்டி மனையின் அகன்றுபோய்க்
கோதில்இறைவனது கூடற்கண் கோவலா சென்(று)
ஏதம் உறுதல் வினை. (எட்டாம் நிலைத்தமிழ் பாடநூல்)
கொடிய நச்சுக்கருநாகம் இளைய அழகுத் திருமகளை வளைந்து
நெளிந்து கொத்தியது. இதனை மேல் தொடரைப்போல்
பாகுபடுத்தி உணர்க.
391. நூ: செயப்படு பொருளிலா வினைகளும் உளவே.
பொ: செயப்படு பொருளில்லாத வினைகளும் உள்ளன.
சா: அவன், மகிழ்ந்தான்; உறங்கினான்; விழுந்தான்; எழுந்தான்;
சிரித்தான்; அழுதான்; விழித்தான்.
|