பொ: செய்வினை செயப்பாட்டுவினை எனவும், தன்வினை பிறவினை
எனவும், உடன்பாட்டுவினை எதிர்மறைவினை
எனவும் மூவினையாக
வினைகள் வடிவம் உறும்.
சா: (246 தொல்) செயப்படுபொருளை என்பதனாலும்,
அராத்தீண்டப்பட்டான், புலிப்பாயப் பட்டான்
என்னும் உரையானும் (243
தொல்) ‘தன்பாலானும் பிறன்பாலானும்’ என்பதாலும் ‘அன்மையின்
இன்மையின்’
(தொல்) ‘அல்லதில்’ (தொல்) என்பவற்றாலும், ஆங்கிலத்தில்
No-Not
வரையறையின்மையாலும்
இம்மூவகையும் ஆங்கிலத்தினின்று
பெறப்பட்டன அல்ல என்றுணர்க. மற்று-
எழுவாய் முதலியன மறைந்து வருவதுபோல்:-
பெற்றோர் (பெறப்பட்டோர்) எல்லாம் பிள்ளைகள் அல்லர்
மிதி(க்கப்படும்) வண்டி; திறமான
புலமையெனில் வெளிநாட்டார் அதை
வணக்கம் செய்தல் (செய்வித்தல்) வேண்டும் (பாரதி) கற்றதனாலாய
பயன்
என் கொல் (இல்லை) நீ வணங்கும் அறிவுப் பூங்கோதைக்குமா? (இல்லை)
என்று மூவகை மாற்று
வினைகளும் ஒளிந்துவருதல் ஒருவகை மொழியியல்பு.
ஆறுவது (ஆற்றப்படுவது) சினம் என்று இத்தொடரில்
இருவினை
மறைந்துவரல் காண்க.
செய்வினை
- செயப்பாட்டுவினை
394. நூ: எழுவாய் செய்வினை யினைச்செயப் படுபொருள்
தழுவி நடத்தல் முதல்வகை மாற்றம்.
பொ: ஒரு தொடரின் நேரிய எழுவாய் செய் வினையாகிய
செய்வினையை அத்தொடரின் செயப்படுபொருள்
தனக்குப் பொருந்துமாறு
தழுவி நடத்தல் மேல் தொகுப்பு நூற்பா குறிக்கும்-முதல் வகைமை
மாற்றமாகும்.
சா: மூவேந்தர் முத்தமிழை வளர்த்தனர்.
முத்தமிழ் மூவேந்தரால் வளர்க்கப்பட்டது.
வி:
தழுவி நடத்தலாவது அஃறிணைச் செயப்படுபொருள் பொருந்த
வேண்டியது உயர்திணை வினையேல் தனக்குத்தக
இறுதி நிலையைத்
திரித்துக் கொள்ளல். திணை வேறுபாடு இன்றேல் இயல்பாகும்.
நான் நூல் படித்தேன்.
நூல் என்னால் படிக்கப்பட்டது.
நாய் பூனையைக் கடித்தது.
பூனை நாயால் கடிக்கப்பட்டது.
கந்தன் முருகனை அடித்தான்.
முருகன் கந்தனால் அடிக்கப்பட்டான்.
|