பக்கம் எண் :
 

    அ. தனித் தொடரைக் கலப்புத் தொடராக்கல்

    (ஒரு சொல்லையோ, தொடர் மொழியையோ, கிளவியமாக
விரிப்பதாலும், தொடரமைப்பை மாற்றலானும் ஆம்).

1. த: அனைவரும் தேவநேயப் பாவாணர் மொழித்திறத்தை ஒப்புக் கொள்வர்.
  க: அனைவரும் தேவநேயப் பாவாணர் மொழித்திறம் மிக்கவர் என்பதை ஒப்புக்கொள்வர் (இது பெயர்க்கிளவியக் கலப்புத் தொடர்).
2. அ: மழை நாளில் மக்களின் நடமாட்டம் குறையும்.
  க: மழை பெய்கின்ற நாளில் மக்களின் நடமாட்டம் குறையும். (இது பெயரெச்சக் கிளவியக் கலப்புத்தொடர்).
3. அ: மாதவி சினத்தினால் கனக விசயரின் தலைகள் நொந்தன.
  க: மாதவி சினந்ததனால் கனக விசயரின் தலைகள் நொந்தன. (இது வினையெச்சக் கிளவியக் கலப்புத்தொடர்).
  ஆ. கலப்புத் தொடரை தனித் தொடராக்கல்

    (ஒன்றோ பலவோ கிளவியத்தைச் சுருக்கி, தொடர்மொழியாகவோ,
சொல்லாகவோ ஆக்கியும், தொடரமைப்பை மாற்றியும் அமைத்தல் வேண்டும்,)

1,   பெயர்க்கிளவியக் கலப்புத் தொடர்:-

        நீ என்ன வேலை செய்கின்றாய் என்பது எனக்குத் தெரியாது.
        தனித்தொடர்:- உன் வேலையைப் பற்றி்எனக்குத் தெரியாது.

2.   பெயரெச்சக் கிளவியக் கலப்புத் தொடர்:-

        அவன் செய்த வேலை அவனுக்கே பிடிக்கவில்லை.
        தனித்தொடர்:- அவன் வேலை அவனுக்கே பிடிக்கவில்லை.

3.   வினையெச்சக் கிளவியக் கலப்புத் தொடர்:-

        நாடு விடுதலையடைந்ததும் வறுமை நீங்கவில்லை.
        தனித்தொடர்:- நாட்டு விடுதலைக்குப் பின்பும் வறுமை
நீங்கவில்லை.

    ‘ஒன்றை மற்றொன்றாய் மாற்றுதல் பயிற்சி’ என்ற உரை நூற்பாவை
மேற்கொண்டு அதன் இயைபாகக் கீழ்க் காண்க.