சா: ‘நாடு உனக்கு என்ன செய்கிறது என்னாமல் நாட்டுக்கு நீ என்ன
செய்கிறாய் எனவெண்ணுக’ என்று
கென்னடி கூறினார்.
நாடு எனக்கு என்ன செய்கிறது என்னாமல் நாட்டுக்கு நான் என்ன
செய்கிறோம் என்று எண்ணுமாறு கென்னடி
கூறினார்.
இது நன் மொழியைத் தன்வயப்படுத்திக் கூறுதல்.
‘நான் நாளை வருவேன்’ என்று மடலிட்டுள்ளான்; நாளை வருவதாக
மடலிட்டுள்ளான்-என்பது மடற்செய்தியை
அன்றே கூறியது. இதுபோல்
பிறவற்றையும் ஒப்பு நோக்கிப் பொருளறிந்து கையாளுக. இதற்குரிய நிறுத்தக்
குறியீடுகளை அடுத்துக் கூறுவாம்.
நிறுத்தக்
குறிகள்
414. நூ: பொருள் தெளிவிற்கும் தொடர்ப்பிரி விற்கும்
திருத்தக் குறியாம் நிறுத்தக் குறிகள்.
பொ: பொருள் தெளிவுறுத்தற்கும், தொடர்ப் பிரிவுணர்தற்கும் நிறுத்தக்
குறிகள் திருத்தக்
குறிகளாகும்.
சா: பழம், பாக்கு, வெற்றிலை வாங்கிவா. (அ.கி.ப.) குறியின்றேல் ‘பழம்
பாக்கு’ என்று
பொருள் வேறுபடும்.
415 நூ: முற்றுப் புள்ளி நான்களபு நேரம்
மற்று முக்கால் அரைகால் அளபே.
பொ: முற்றுப் புள்ளியை நான்களபு
(மாத்திரை) நேரம் நிறுத்தியும்
மற்றைய முக்கால், அரை, காற் புள்ளிகளை அவ்வளவுப்படி மூன்று,
இரண்டு,
ஒன்று என்னும் அளபு நிறுத்தியும் பயில்க.
இவ்வளவு முறை ஒரு வரையரைப் பாட்டிற்கே.
முற்றுப் புள்ளி
416 நூ: தலைப்பு முழுத்தொடர் முடிவு; நாள், சொற்
சுருக்கம், பெயர்ப்பின் முற்றுப் புள்ளி.
பொ: தலைப்புக்குப் பின்னும், முழுத்தொடர்
முடிவிடத்திலும், நாள் கு
க்குங்காலும், சொற்சுருக்கக் குறிகளுக்கு இடையிலும், பெயருக்குப் பின்னும்
முற்றுப்புள்ளி அமையும்.
|