பக்கம் எண் :
 

   

சா : முருகன் அருளுவன்-என்னும்கடவுட் பெயரும், நரிமாமா வந்தார் - என்னும் குழந்தைக் கதை மரபுப் பெயர்க் கூற்றும் அவ்வகைய.

49. நூ: ஆண் பெண் இரண்டும் அலது என அமைந்த
       ஞாலப் பொருள்களை ஒருமை பன்மை
       என்னும் எண்ணோடியையக் கூட்டி
       ஐம்பால் ஆக்குவர் தொன்மைச் சான்றோர்.

    பொ: ஆணென்றும், பெண்ணென்றும், இரு தன்மையும் அல்லாதது என்றும் அமைந்திருக்கும் உலகப்பொருள்களை ஒருமை பன்மை என்னும் எண்ணிக்கை முறையில் தொடர்புறுத்திப்பால் ஐந்தென்பர்; பண்டைத் தமிழ்ச் சான்றோர்.

    பெண்ணாகி ஆணாய் அலியாய் (திருவெம் 18) திறவுகோலை இரட்டை ஆண், பெண் என்று பிரித்துரைப்பினும் இரண்டும் அலது பெரிதும் உயிரற்ற பொருள்களே.  எண்ணைத் தனித்துக் கூறாமல் பாலில் அடக்குவர் பண்டையோர் என்றபடி.

 

உயர்திணை

அல்திணை

நேர்ப் பிரிவால் திணை வகையும்
குறுக்குப் பிரிவால் எண்ணும் - பால் காட்டுவது அறிக.

சூ

ஆண்பால்

பெண்பால்

ஒன்றன் பால்

பலர்பால்

பலவின் பால்

50. நூ: அவற்றுள்,
       ஆண் பெண் பலர் எனல் உயர்திணைப் பிரிவே
       ஒன்று பலவிவை அஃறிணைக் குரிய.

    பொ: அவற்றில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்பன
உயர்திணைப் பிரிவாம்.  ஒன்றன்பால், பலவின்பால் என்னும் இவை
அஃறிணையில் அடங்கும்.

    சா: களிறு, பிடி; சேவல், பெட்டை என அஃறிணைக் கண்ணும் பால்
வேறுபாடுள்ளதாகவும் ஒன்றன்பால் எனவகுத்தது - இருபாற் சொல்லும் ஒரே
இறுநிலைபெறுதலின் பொருள் நோக்கூடே சொற்றொகுப்பு நோக்கி
ஒன்றாக்கப்பட்டது என்க.

    (ஆவந்தது, எருது வந்தது.  மந்தி எழுந்தெழுந்து கைந்நெரிக்கும்
ஈங்கோயே; வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்).

51. நூ: தன்னைச் சுட்டும் தன்மை; தனக்கு
      முன்னைச் சுட்டும் முன்னிலை; இரண்டும்
      அன்மையைத் தொலைவிலும் அருகிலும் படர்ந்து
      சொல்லும் படர்க்கைஎன் றிடம்மூ வகையே.