பக்கம் எண் :
 

ஐ)   சிறுகதை புதினம் நாடகம் என்னும்
     வருவகைப் புதிய இலக்கிய வடிவுகள்
     வரவேற் புரியன; ஆயின் அவையே
     உரையா டுறுப்பினர் உருவந் தெரிய
     உணர்வுகுன் றாமலே ஒழுங்குடை மொழியால்
     நனவுக் கொப்ப நடத்தல் நன்றே.

ஒ)   அறிவின் வளர்ச்சி விசும்பு தடவப்
     போக்கு வரத்தும் அஞ்சலும் உலகைக்
     கூப்பிடு தொலைவாய் ஆக்கிய இந்நாள்
     ஒருமொழி அயன்மொழிச் சொற்களில் ஒன்றும்
     கலவா திருத்தல் இயலா தெனினும்
     அரைவிளை வாகிய தமிழுக் கின்று
     களைப்பறி செய்யும் கால மாதலின்
     பிறமொழிக் கடனில் பொருள்கொடு, சொல்லைத்
     தணிக்கை செய்வதே தனித்தமிழ்க் கொள்கை;
     அனைத்துத் தமிழரும் அவ்வழிச் செல்க.

ஓ)   தனித்தமிழ்க் கொள்கை என்னும் வேலி
     புதுத்தமிழ்க் கன்று பொதிந்துவேரோடி
     நிலைத்ததன் பின்னர் நீக்கப் படலாம்;
     கனித்தமிழ் மரச்சிறு காப்பும் ஆகலாம்.

ஒள) பாரையே மயக்கிய மாமொழிப் புரட்டாம்
     ஆரிய வேரைப் பீறிய அரிமா
     ஞா.தேவ நேயப் பாவாணர் நூல்கள்
     ஆவலும் அறிவும் தமிழினில் ஆக்கும்.

-    முற்றிற்று  -