பக்கம் எண் :
 

விப்பது என்பதும் ஒருவகை) குன்று - ஓங்கல் இன்றிக் குன்றிய சிறுமலை. 
கூட்டத்திருந்தான் ஒருவனைச் சுட்டிப் பிரித்துக் கூப்பிடவும் பயன்படுதல்
காண்க.

58. நூ: காரணம் பற்றியே தோன்றும் பெயர்தம்
       காரணம் கரப்பின் இடுகுறி எனலாம்.

    பொ: காரணம் பற்றியே உண்டாகும் பெயர்களில் சிலவற்றின் காரணம்
சொற்றிரிபாலோ, பொருட்டிரிபாலோ மறைந்து விடின் இடுகுறி எனப்படலாம்.
இதனால் காரணந் தெரிந்த பின் இடுகுறிப் பெயர் காரணப் பெயர் ஆம்
என்றறிக.

   

சா: கரி - கருமை பற்றியதாய்க் காரணப் பெயராம்.
  யானை - காரணம் மறைந்துள்ளமையால் இடுகுறிப்பெயர்.

59. நூ: அவையே,
       பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின.

    பொ: பெயர்ச்சொல், பொருள், இடம், காலம், உறுப்பு, பண்பு, தொழில்
இவற்றைக் குறிப்பன.  (நன்னூலார் கூறிய இவ்வாறு வகை சமண சமயப்
பொருட்பாடு.)

    சா: சுவடி, பள்ளி, ஞாயிற்றுக்கிழமை, கை, சினம், ஆடுதல்.

60. நூ: தன்மை முன்னிலைப் பெயர்கள் எண் காட்டும்
       படர்க்கையாகிய முழுமைப்பெயர்கள்
       திணைபால் எண் இடம் நான்கும் காட்டும்.

    பொ: தன்மை முன்னிலைப்பெயர்கள் எண் காட்டும்.  படர்க்கையாகிய
முழுமைப்பெயர்கள் திணைபால் எண் இடம் நான்கையும் காட்டும்.

    சா: நீ-ஒருமை; நாங்கள்-பன்மை.

    அவன்: உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கை,

61. நூ: முற்று வினைபோல் ஐந்தொகையின்றி
       எச்சவினைபோல் எச்சப்படாமல்
       தொழிலை மட்டும் சுட்டும் தொழிற்பெயர்.

    நு: வினைக்கும் தொழிற்பெயர்க்கும் உளதாம் வேறுபாடு கூறுதல்
நுதலிற்று இந்நூற்பா.

    பொ: வினைமுற்றைப்போல் ஐந்தொகை காட்டுவது ஒன்றும் இன்றி,
எச்சவினைபோல் வினை முதனிலையோடு பொருளெஞ்சி நிற்றல் இன்றி -
தொழில் தன்மையை மட்டும் ஆளொடு சார்த்தாது சுட்டுவது தொழிற்பெயர்.