உவமை: கத்தரிக்காய் (குள்ளன்) பனைமரம் (நெடியவன்) வந்தார்கள்.
கண்ணே மணியே முந்தத்தா - (உருவகம்) (தே.வி)
சா:
கடியாரம் ஓடுமுன் ஓடு-காலத்தை மணிப்பொறி செய்யாமையானும்
முள் ஓடுவதைக் குறிப்பதே பாவேந்தர்
கருத்தாகலானும் கருவியாகு
பெயராகாது; முதலாகு பெயராதல் உணர்க.
விரி: ‘தொன்முறை வழக்கு’ என்பது இயைந்த பெரும் வரையறையன்று.
அறிஞர் பெயர் கடவுளர் பெயர்களை
குழந்தைக்கிட்டழைத்தல்,
அவர்போலாதல் வேண்டும் ஆர்வ எழுச்சியாதலால் உவமையுள் அடங்கும்.
கடவுட் பெயரைச் சொன்முறைக்காக இடுகின்றனர் எனின் அப்பெயர்
அவனை அழைப்பதற்கு இவன் இடமாக
இருத்தலின் இடனியாகு பெயருள்
அடக்குக. இடனி-தானி.
இடம் - இடனி: முதல் - சினை இவை எதிரெதிர் நிலையின.
அளவைப் பெயர்களைச்சார்த்திக்கூறுதல்
ஆகுபெயர் என வேண்டா. கருவி,
கருத்தன், கருமம் பற்றிக் காட்டும் இந்நூல் - திருவாசகம், திருவள்ளுவர்,
அணி எனுமிவை தலைப்புகளாய் அமைதலான் தனித்துக் கூறல் பெரும்
பயனின்று.
65. நூ: மடிபெறும் ஆகுபெயரும் உண்டே.
பொ:
ஒருமுறை ஆகிவருதலின்றி மடிந்து பன்முறை ஆகி வருதலும் உண்டு.
சா:
கார் முற்றியது.
- என்றால் கார் என்னும் கருமைப்பற்றிய முகிற்பெயர் மழைபெய்
காலத்தைக் குறிக்க, அஃது அக்கால
விளைவுடை நெல்லைக் குறிக்க
மும்முறைமடி கொண்டது. இவற்றுள் பண்பாகு பெயர், இடனியாகு பெயர்,
காலவாகுபெயர் மூன்றும் அமைந்தன,
வாலுப்பயல் என்பது வாற்சிறப்பால் குரங்கையும் அதன் வழிக்
குதிப்பையும், அஃதொத்தவன் என்பதையும்
குறித்தலான் சினை, பண்பு,
உவமை ஆகுபெயராயின. (வாலின் நெடியகுரங்குஎன்னுஞ் சிறப்பால்
பிறவாகாது)
புளித்தின்றான் முதலியனவும் இத்தகையன.
|