‘றன’வை இறுதிவைக்கும் பண்டைமுறைமை காரணத் தெளிவின்மையும்
குழப்பமும் உடைமையின் மேற்கண்டாங்கே
பயிற்றலாம்.
7. நூ: அ இ முதல் சேய்மை அண்மைச்சுட்டு.
பொ:
அ, இ இரண்டும் சொல் முதலில் நின்று சேய்மைப்
பொருளையும், அண்மைப்பொருளையும் சுட்டிக்காட்டும்.
(சுட்டுவிரல் என்னும்
வழக்கொடு பொருத்திக்காண்க.)
சா:
அவன்; இப்பையன்.
வி:
இடைப்பால் சுட்டும் உகரச்சுட்டு வழக்கழிந்தது. இவற்றுள் அவன்
என்பது சுட்டடிப் பெயராய்த் தோன்றி,
பிரிப்பின் சிதையுமாறு சுட்டு -
சொல்லகப்பட்டு நிற்றலின் அகச்சுட்டு என்றும் அம் மகன் என்பது
அவ்வாறின்றிச் சொல்முற் புறத்து நிற்றலின் புறச்சுட்டு என்றும்
பின்னுரையாளர் கூறுவர். ஆயின்
வினாவிற்குச் செல்லாமையின்
முழுவலிவிலவாம்.
8. நூ: ஆ ஓ இறுதி எ யா முதல் வினா.
பொ:
ஆ, ஓ இரண்டும் சொல் இறுதியிலும், எ, யா எனும் இரண்டும்
சொல் முதலிலும் வினவும் கருத்தால்
வினா எழுத்துகளாம்.
சா:
எது; யாது; அவனா; அவனோ
“அலையிடைப்பிறவா அமிழ்தே என்கோ!”
வி:
ஏ என முன் வரும் ஏது, ஏன் என்னும் இருசொல்லும் எது, என்
என்பனவற்றின்திரிபே. ஏவன் - எனக்காட்டும்
பிறவும் திரிபே. இதை
ஏற்பின் ‘உயர்நலம் உடையவன் யவனவன்’ எனயா-யதிரிபும் ஏற்க
வேண்டுவதாம்.
எனவே ‘ஏ’ (மொழிமரபு) தொல்காப்பியர் கருத்துப்படி
இறுதியில் வரும் தன்மையதாதல் வேண்டும்.
ஓ இக்கால் வழக்கில்
ஒளிந்தாங்கு ஏ ‘ஆ’ வினாவிலேயே அடங்கிற்றுப் போலும்.
‘முழுதும் அறியாததை எது என்றும் சிறிது தெரிந்ததை யாது என்றும்
வினாவுக’ என்னும் பிரிப்புணர்வு
தெளிவிலது.
நீ தந்தாய்? வந்தாய் நீ? என வினாவெழுத்து ஒலிப்பில் மறைந்து
வினாப்பொருள் தருவதையும் ஈண்டே
அடக்குக.
9. நூ: ‘குறில்பின் வலிமுன் இடைப்படும் ஆய்தம்.’
பொ:
தனிக்குறிலெழுத்தையடுத்து இருந்து தனக்குப்பின் உயிர்மெய்
வடிவேற்ற வல்லெழுத்துகளைச் சார்ந்து
இடைப்பட ஆய்தம் வரும்.
|