சா:
தமர், நமர், நுமர் என்பவை தாம், தன்மை, முன்னிலையுள்
அடங்கலின் தனித்துக் கூறலாம்,
‘படர்க்கையோரை அழைப்பது’
என்பதனான் தன்மை முன்னிலை அழைக்கப்படா என்பது பெறினும் தெளிவு
கருதிக் கூறப்பட்டன.
81. நூ: ‘ஆறே பெயர்கொளும் அல்லன வினைகொளும்’.
பொ:
ஆறாம் வேற்றுமை உருபு பெயர்கொண்டு முடியும்; அல்லாத
பிற ஏழு வேற்றுமையும் வினைகொண்டு முடியும்.
விரி: பெயர்கொண்டு முடிதல் பற்றியன்றோ உடை + அ - உடைய
என்று ஆறன் உருபு பெயரெச்ச வடிவில்
உள்ளது. பிணிக்கு மருந்து,
மணியின்கண் ஒளி என்பனவற்றைக் காட்டி நான்கும், ஏழும் பெயர்
கொள்ளுமெனின், அவை பிணிக்குக் கொடுக்கும் மருந்து, மணியின்கண்
இருக்கும் ஒளி என எச்சவினை
மறைய நிற்றலின் வினை கொண்டதேயாம்.
கையில் காசு (கொடுத்தால்) வாயில் தோசை (கிடைக்கும்)
போல்வனவற்றை
நோக்கி உண்மை உணர்க.
82. நூ: ஒன்றன் உருபுமற் றொன்றன் பொருளைச்
சென்றே உணர்த்தினும் பொருளே செம்மை.
பொ:
ஒரு வேற்றுமையின் உருபு மற்றொரு வேற்றுமைப் பொருளைச்
சென்றுணர்த்தினாலும் உருபுபற்றிக் கணித்தலே
செவ்விதாம்.
சா:
‘அவ்வித் தழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்’.
இரண்டு உருபையும் அவ்வாறு கொண்டு பொருள்கூறின்
அழுக்காறுடையவனையும். மூதேவியையும் பிறிதொருவர்க்குச்
செய்யவன்
காட்டிவிடும் என்றும், அழுக்காறு உடையானுக்கு எனின் தவ்வையை
அழைத்துவந்து அவனுக்குக்
காட்டும் என்றும் தவ்வைக்கு எனின்
அழுக்காறுடையன் இருக்கும் திசையில் காட்டும் என்றும்
பொருள்படல்
காண்க. இவற்றுள் முதற்பொருள் முற்றும் மாறாதலும் இரண்டாம் பொருள்
காட்டுமளவேனும்
அவனொடு சார்தலுண்மையால் நயங்குறைதலும்,
மூன்றாவது பொருள் சுட்டற்கு அவனே செயப்படுபொருளாதலான்
பொருந்துவதும் அறிக.
ஆறு மணிக்குக் கூட்டம் நிகழும்.
என்புழி ஆறு மணியளவில் என்னும் பொருளே தோன்றலின் ஏழன்
வேற்றுமையே கொள்ளப்படும். செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு
(குறள்); செல்வர்க்கு இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்
(குறள்)|
இடிப்பார்.
|