பக்கம் எண் :
 
87

87. நூ: ர, கள் இறுதி பலர்பாற் சொல்லே;
       பம்மார் இறுதிப் பண்டைப் பலர்பால்.

    சா: கூவினர், கூவினார் (கள்).

    ஆர் இறுதி கள்பெற்றே பலர் பாலாதல் இக்கால் வழக்கு.

    சா: கண்ணென்ப வாழும் உயிர்க்கு.  ஆசிரியன்மார் ஐயன்மீர்
(ஐயன்மார்) கோமான், எண்மர் எனவருவனவற்றுள் மகரஞ்சாரியை என்பது
போல் ஈண்டும் கூறலாம்.  இவைபோல் வழக்கிழந்த இறுதிகள்பின்னும்
கூறப்பெறுவது பண்டை இலக்கியப்பயிற்சி புகுவார்க்கு.

88. நூ: அ, வை, கள் இறுதி பலவின்பாற் சொல்.

    சா: ஓடின, ஓடியவை, மாடுகள்.  வை, கள் இரண்டும் பெயர்க்கே
உரியன.  பிற என்பது போல் சிறுபால் ‘அ’கரம் பெயரில் வரும். 
வினையில் அகரத்தின் பின் கள்சேர்க்க நடந்த முயற்சி தோற்றது.
செய்வனகள் (திருப்பாவை)

89. நூ: து, று இறுதி ஒன்றன் பாலே.

    சா: வந்தது; கூவிற்று.

90. நூ: ஏன், எனும் இறுதி தன்மை யொருமை
       (அல் என் தொன்மை அன்னே இடைமை)

    பொ: ஏன் என்னும் இறுதி தன்மை யொருமையைக் குறிக்கும்.

    அல் என் என்பன, தொன்மையான இறுதிகள்; ‘அன்’ இடைகாலத்து
இறுதி.

    வந்தேன் வருவல்; வந்தனென் கூறுவன்

    அல் இறுதி எதிர்காலச் சொல்லினே வரும்.  தன்மை ‘அன்’
படர்க்கையொடு பின்னிச்சிக்காவாறு பயன்படுங்கால் வரும்.  தன்மை
வேற்றுமைத் திரிபெயராய என் என்பதே இறுதியாய்ப் பின் அது நீண்டே
‘ஏன்’ தோன்றியிருக்கலாம்.  அல் இருத்தல் நோக்கியும் ஆண்பால்
நோக்கியும் னகர இறுதியெனக்கூறலாம்.

    கடையவனேனை (திருவா) என்பதுமீ மிசை.

91. நூ: மகர இறுதி தன்மைப் பன்மை.

    சா: வந்தாம்; வந்தோம்; வந்தேம், வந்தனெம் வந்தனம் மேலதுபோல்
இவற்றுள் ஓமொன்றே பேச்சு வழக்குடையது.