சா:
வாரும்-வாருங்கள் வாராதேயுங்கள் (விவிலிய நூல்) பிழை;
வாராதீர் முறை; வந்துசெல்லவும் - என்னும்
மடல் மொழி பிழை;
வந்துசெல்லும் என்பதுமுறை.
96. நூ: இர், ஈர் முன்னிலைப் பன்மை; மின் ஏவல்.
சா:
உண்டனிர், உண்டீர், செய்ம்மின்.
97. நூ: க அல் இறுதி வியங்கோட்குரிய
யவ்வெனும் இறுதி சிலசொல் வழக்கே.
சா:
வருக; மக்கட் பதடி எனல், வழுக்கியும் வாயாற்சொலல்.
கொக்கொக்க. வாழிய செந்தமிழ்
எனவரும் யகரம் இன்றி வாழி என
வருதலும் இகர இறுதிபற்றி முன்னிலையாகாதவற்றை உணர்த்த நன்னூலார்
தனித்தொரு நூற்பா இயற்றினார் போலும்.
98. நூ: ஏவல் போலெதிர் காலம் காட்டினும்
மேவும் வியங்கோள் முன்னிலை அன்றி
மூவிடம் நடந்தும் ஈரெண்கலந்தும்
கட்டளையோடு வசைதல் வாழ்த்தல்
விதித்தல் வேண்டல் பொருளினும் விரியும்
நு:
ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உரிய ஒற்றுமை வேற்றுமை
உணர்த்துதல் நுதலிற்று.
பொ:
வியங்கோள் ஏவல் போன்றே எதிர்காலம் காட்டுவதாயினும்
ஏவல் சுட்டுவது போல் முன்னிலை மட்டன்றி
பிற இரண்டிடங்களையும்
காட்டி நடந்தும், ஏவல் போல் ஒருமை பன்மை உருமாறுபாடின்றி ஒன்றே
இரண்டெண்கலந்து
சுட்டியும், ஏவலுக்குரிய ஆணையோடு வசைதல்,
வாழ்த்தல், விதித்தல், வேண்டல் பொருள்களிலும்
விரிந்து வரும்.
சா:
(ஒருவன், எல்லோரும், நீ) ஓல்லும் வகையான் அறவினை
ஓவாதே - செல்லும் வாயெல்லாம் செயல்.
வாழ்க என் மனனும் மணிநாவும்மே. (ம. க.)
வசை |
:
|
பரந்து கெடுக உலகியற்றியான்! |
வாழ்த்து |
:
|
தமிழ் வாழ்க! |
வேண்டல் |
:
|
ஓருலகர சமைவதாக! |
விதித்தல் |
:
|
முதுநரியாகக்கடவீர்! என்றார் கவுந்தியடிகள். |
வசைதல் என்பதன் திரிபேவைதல் (புறம்)
|