114. நூ: வேற்றுமை உருபுகள் ஆறின் பொருளுறக்
கூட்டிடும் சொற்கூடுதல் வேற்றுமைத் தொகை.
பொ: உருபுடை வேற்றுமையாகிய
இரண்டு முதல் ஏழு முடிய உள்ள
ஆறு வேற்றுமைகளின் பொருள் பொருந்தி நிற்கக்கூடிய சொற்கள்
சேர்ந்தொன்றாய்த்
தோன்றுவது வேற்றுமைத் தொகை.
சா:
மரம் வெட்டினான்; தலை வணங்கினான்;
வள்ளிகணவன்; என்தூவல்; குன்றக்கோயில்.
விரி:
கூட்டிடும் சொல்லாவது;-
மூன்றனில் ஓடு உருபுஉடன் நிகழ்ச்சிப் பொருள் தோன்றச் சொற்கள்
வாராமையும் ‘கந்தன் வணங்கினான்’
என்னும் முதல் வேற்றுமையில் ஐ
உருபு இரண்டன் வேற்றுமை எனில் பொருளுணர்ச்சிப் பிறழ்வால்
பொருந்தாமையும் போல்வன.
115. நூ: வேற்றுமைத் தொகையின் பொருள் விரிக்குங்கால்
சிலஉருபெ டு பெயரெச்சம் வேண்டும், அஃ(து)
உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை.
பொ:
வேற்றுமைப் பொருளை விரித்துக் காணும் போதில் சில உருபு
பின்னுள்ள பெயரோடு பொருந்தாமையின்
பெயரெச்சவினையிட்டு விரித்தல்
வேண்டுவதாம். அஃது உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையாம்.
(உருபுதான் தொக்கவிடத்துடனே தொக்கும் விரியுமிடத்தொக்கவிரி சொல்லும்
உள-என்னும் நேமிநாதம்).
பெயரெச்சம் என்றதனான் இரு பெயர் ஒன்றிய வேற்றுமைத்
தொகையினே உருபும் பயனும் உடன் தொகும்
என்பதறிக. இதனால்
இயல்பாகவே இருபெயரொடு இயங்கும் ஆறாம் வேற்றுமைத் தொகை
அவ்வாறாகாது
என்றும் உணர்க.
|
சா: |
திரைகடல்
|
- |
திரையை உடைய கடல் |
|
|
பொற்குடம் |
- |
பொன்னால் செய்த குடம் |
|
|
தலைவலி மருந்து |
- |
தலைவலிக்கு கொடுக்கும் மருந்து |
|
|
மலையருவி |
- |
மலையிலிருந்து விழும் அருவி |
|
|
மணியொளி |
- |
மணியில் ஒளிரும் ஒளி. |
116. நூ: உம்மைச் சொல்லடுக் குறலும் மைத்தொகை.
பொ:
சொற்கள் அடுக்கிவர ‘உம்’ என்னும் இடைச்சொல் இயைக்கும்
நிலையடைதல் உம்மைத் தொகையாம்.
சா:
இயல் இசை நாடகம் கொண்டது தமிழ்
இராப்பகல் அமைவது நாள்.
|