பக்கம் எண் :
 
பெ

    பொ: இடைநிலைகாட்டத்தகும் காலத்தைச் சில விடத்து முதனிலை
இரட்டித்துக்காட்டியதுபோல இயல்பாகவே இறுதி நிலையும் சில சொல்லில்
காலங்காட்டும்.

    பின்வரும் மூன்று நூற்பாக்கள் இதனை விளக்கும்.

161. நூ: வியங்கோள் ஏவல் ஆய்மின் எதிர்வு

    சா: செல்க, போ, கூவாய், வம்மின்

162. நூ: செய்யநிகழ்வெதிர் செய்யின் எதிர்வே

    சா: உய்யக்கண்டான், உய்யக்கொண்டான்; ‘உணின் உண்க’

163. நூ: செய்யுமென் முற்று முற்றும் எதிர்வே
       செய்யுமென் எச்சம் பெரிதும் எதிர்வும்
       சிறிதே நிகழ்வும் செறிந்தே நிகழும்

    சா: என்னாயினும் உலகம் வாழும்; பெய்யெனப் பெய்யும்மழை;

    ‘வரும்மாடு தான் நன்று -

    இவை அறுவகையும் இறுதிநிலை யின்றியே காலங்காட்டின.

164. நூ. செய்யும் எனும்வாய் பாட்டைப் பிரித்தல்
        வேண்டின் இடைநிலை இல்லனவாம் சில
        கவ்வொலி பயில்வது காலமில் இடைநிலை.

    பொ: செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்களைப் பிரித்தலாகாது;
பிரிக்கவேண்டுமாயின் சில சொற்கள் இடைநிலை இல்லாதனவாம். 
கவ்வொலி பயிலும் சொற்களில் உள்ள ககரம் காலம் காட்டா
இடைநிலையாம்.

    ஓடும்; வரும்; நடக்கும்; இறுதிநிலை காலங்காட்டலின் ககரம் காட்டாதாம்.

165. நூ: அ, உம் பெயர்க்குறை இறுதி; உ, அ
        இன்-இவை வினைக்குறை; இ, உவில் அடக்குவர்.

    பொ: செய்தசெய்கின்ற என்னும் பெயரெச்சத் திறுதிநிலை அ; செய்யும
என்பதன் இறுதிநிலை உம்; முக்கால வினையெச்சங்களின் இறுதி முறையே
(செய்து) உ; (செய) அ (செயின்) இன்-இவையாம்.  வினையெச்சத்தினே இகர
இறுதியைப் பொருள் முடிவுபற்றி உவ்வில் அடக்குவர்.

சா: செய் + த் + அ; செய் + கின்று + அ; செய் +(ய்)உம்;  
  செய்   த்   உ; (செய் + இ) செய் + அ; செய்+ இன்(த்+ஆல்)