187. நூ: உயிர்முன் உயிரே மெய்ம்முன் உயிரே
உயிர்முன் மெய்யே மெய்ம்முன் மெய்யே
எனுநான் கெல்லையில் புணர்திறம் அடங்கும்
பொ:
தமிழ்ச்சொல் மெய், உயிர்இரண்டே முதலிறுதி ஆதலின்
அம்முறைப்படியே உயிர்முன் உயிரென்றும் மெய்ம்முன்
உயிரென்றும்
உயிர்முன் மெய் எனவும் மெய்ம்முன்மெய் எனவும் நான்கு எல்லைகளினே
புணர்ச்சித்திறம்
அடங்கும்.
சுவை உணர்வு; ஆடல் அழகு
ஆடி(ப்)பெருக்கு; பொங்கும் மங்கலம்
188. நூ: மெய்ம் மூவினத்தால் புணர்வகை மூன்றே
பெரும்பால் ஒன்றுயிர் இவைநாற்கணமாம்
பொ:
மெய்யெழுத்துத்தம்முள் ஒலி வேறுபாட்டால் மூன்றினப்
பிரிவுக்கேற்பப் புணரும் வகையும் மூன்றாம்;
உயிர் குறில், நெடில் என இரு
பிரிவாயினும் பெரிதும் ஒருவகைப் புணர்வேயாம். இவை நாற் குழுவை
நாற்கணம் என்பர்.
உயிர் ‘பெரும்பால்’ ஒரு புணர்வகை என்றது, தான் நேரே
வேறுபாடின்றேனும் ‘தனிக்குறில் அடுத்த மெய்’த்திரிபு,
உகர இறுதி ஒடுக்கம்
போல்வன உளதாகுதலான்.
189. நூ: வருமெய்ப் புணர்வில் கசதப வலியே
ஞநம மெலியே வயஇடை யேகுறி.
பொ:
நிலைச்சொல் இறுதியொடு வருசொல் மெய்ம்முதற் புணர்ச்சியில்
க ச த ப வல்லினமும் ஞநம மெல்லினமும்
வயஇடையினமும் குறித்து
வருவனவாம்.
வி:
இந்நூற்பா சொல்முதல் எழுத்துகளைத் தொகுத்தது. பின்னூற்பாக்களில் வலிவரின் என்றால் ‘க ச
த ப வரின்’ எனும் பொருள்
விளங்கச் செய்யப்பட்டது. இதுபோல் சொல்லிறுதி எழுத்துகளுக்கு நூற்பா
வேண்டாமை தனித்தனிக் கூறலானும் தொகுத்துக் கூறுதல் சிறு பாலானும்.
இதனால் மனத்துக்கொள
வேண்டும் கருத்துகளே
நூற்பாவாக்கப்பட்டமையும் பிறவுரையிற் கூறலும் உணர்க. சொல்லிறுதி
மெய்யெழுத்துகளை
வேண்டுமேல் ‘ணமன மெலி உயிர் ய ர ல ழ ள
இடை எனமுடிக்க.
190. நூ: முன்னெனும் சொல்லே காலம் குறிப்பின்
பின்னுறக் காட்டும்; இடமுன் வழக்கில்
உள்ளது போன்றே முகத்தெதிர் காட்டும்
|