சொல்லதிகாரம் | 160 | முத்துவீரியம் |
(வ-று.) குருசீர், மக்காள்.
(126)
இதுவுமது
584. அயனெடி தாயி னியல்பா
கும்மே.
(இ-ள்.) ஈற்றயலெழுத்து
நெட்டெழுத்தாயின் இயல்பாய் விளிக்கும்.
(வ-று.) பெண்பால்,
கோமாள். (127)
ஆள் என்பது விளியேற்குமாறு
585. ஆளெ னிறுதிப் பண்புப்
பெயரும்
வினைப்பெயர்க் கிளவியு
மாயொடு விளிக்கும்.
(இ-ள்.) ஆளீற்றுப் பண்புப்
பெயரும் வினைப்பெயரும் ஆயாக விளிக்கும்.
(வ-று.) கரியாள், கரியாய்;
நின்றாள், நின்றாய் எனவரும். (128)
முறைப்பெயர்
விளியேற்குமாறு
586. 1 முறைப்பெயர்க்
கிளவி முறைப்பெய ரியல.
(இ-ள்) ளகாரவீற்று
முறைப்பெயர் னகாரவீற்று முறைப் பெயரைப் போல ஏகாரம்
பெற்று விளிக்கும்.
(வ - று.) மகள், மகளே
எனவரும். (129)
விளியேலாப் பெயர்கள்
587. யாவ ளவளிவ ளுவள்விளி
யாவே.
(இ-ள்.) யாவள், அவள்,
இவள், உவள், விளியேலாவாம். (130)
அளபெடைப் பெயர்
விளியேற்குமாறு
588. அளபெடைப் பெயரே
யளபெடை யியல.
(இ-ள்.) ல ள க்களீறாகிய
வளபெடைப் பெயர் நீண்டு விளிக்கும்.
1. தொல் - சொல் - 147.
|