பக்கம் எண் :
 
பொருளதிகாரம்254முத்துவீரியம்

நின்று வருந்தல்

என்பது, தலைமகளை ஆயத் துய்த்துத், தான் அவ்விடத்தினின்று, அப்புனத்தியல்பு
கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தா நிற்றல்.

(வ-று.)

பொய்யுடை யார்க்கரன் போலக லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே. (திருக். 48) (9)

பாங்கற்கூட்டம் முற்றும்.

 

10. இடந்தலைப்பாடு

837. பொழிலிடைச் சேற லிடந்தலை சொன்ன
      வழியொடு கூட்டி வகுத்திசி னோரே.

(திருக்கோவையார் உரை.)

என்பது, பொழிலிடைச் சேறலொன்றும் இடந் தலைப்பாட்டிற்கே யுரியது.
இதனையுமேலைப் பாங்கற் கூட்ட முணர்த்திய சூத்திரத்தில், ஈங்கிவை நிற்ப இடந்தலை
தனக்கு மெனக் கூறியவாறே, மின்னிடை மெலிதன் முதல் நின்று வருந்தல் ஈறாகக் கூறிய
கிளவிகளோடு கூட்டி, இடந்தலைப்பாடா மென்றியம்புக.

அவை பாங்கற் கூட்டத்திற்கும், இடந்தலைப்பாட்டிற்கும் உரியவாமா றென்னை
யெனின்; பாங்கற் கூட்ட நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும், இடந்தலைப்பாடு
நிகழாதாயின் பாங்கற் கூட்ட நிகழுமென்றுணர்க.

பொழிலிடைச்சேறல்

என்பது, இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கட்சென்று எய்துதற்கருமை நினைந்து
வருந்தாநின்ற தலைமகன், இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடுகூடிய முயற்சியான்
வந்ததன்று, தெய்வந்தர வந்தது, இன்னும் அத்தெய்வந்தானே தரும், யாம் பொழிலிடைச்
செல்வேமெனத், தன்னெஞ்சொடு கூறாநிற்றல்.