பொருளதிகாரம் | 264 | முத்துவீரியம் |
பிறைதொழு கென்றல்
என்பது, பிறையைக் காட்டித்
தான் தொழுது நின்று, நீயுமிதனைத் தொழுவாயாக
வெனத், தோழி தலைமகள் புணர்ச்சி நினைவறியாநிற்றல்.
(வ-று.)
மைவார் கருங்கண்ணி
செங்கரங் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிறைக்கே. (திருக். 67)
வேறுபடுத்திக் கூறல்
என்பது, பிறைதொழாது தலைசாய்த்து
நாணி நிலங்கிளையா நிற்பக்கண்டு, பின்னுமிவள்
வழியே யொழுகி யிதனையறிவோமென வுட்கொண்டு,
நீபோய்ச் சுனையாடி வாவென்ன,
அவளும் அதற்கியைந்து
போய் அவனோடு தலைப்பெய்துவர, அக்குறிப்பறிந்து,
அவளை
வரையணங்காகப் புனைந்து வேறுபடுத்திக் கூறல்.
(வ-று.)
அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண்
புனமுடையாள்
அக்குன்ற ஆறமர்ந் தாடச்சென் றாளங்கம் அவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகும் உனக்கவளே.
(திருக். 68)
(கு-ரை.) அக்கு தவாமணி சேர்கண்டன்
- உருத்திராக்க மணி நீங்காத அழகிய
திருமிடற்றை
யுடையவன். இன் - சாரியை.
சுனையாடல் கூறிநகைத்தல்
என்பது, வேறுபடுத்திக்கூற நாணல்கண்டு,
சுனையாடினால் இவ்வா றழிந்தழியாத
குங்குமமும் அளகத்தப்பிய தாதும் இந்நிறமுந் தருமாயின்,
யானுஞ் சுனையாடிக் காண்பேன்
எனத், தோழி
தலைமகளோடு நகையாடல்.
(வ-று.)
செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்றில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி லங்கழி
குங்குமமும்
|