பொருளதிகாரம் | 318 | முத்துவீரியம் |
நெறிநனி விலக்கலும் நெறியிடைக்
கண்டவர்
செறிவெடுத் துரைத்தலுஞ் சேயிழை யாளுடன்
வழிவிளை யாடலும் வழியெதிர்
வருவோர்
எழினக ரணிமை யிதுவென வுரைத்தலும்
நகரங் காட்டலு நகரிடைப் புக்குப்
பதிபரி சுரைத்தலும் பாங்கியைக்
கிட்டி
மதிநுத லாளை வளர்த்தவள் கேட்டலும்
அறத்தொடு நிற்றலு மதுகேட் டழுங்கலும்
திறப்பா டுன்னிச் செவிலிகவன்
றுரைத்தலும்
அடிநினைந் திரங்கலு மதுதாய்க் குரைத்தலும்
மடவரல் போகவா டியுரைத்தலும்
கிளிமொழிக் கிரங்கலுங்
கிளர்சுடர்ப் பராய்தலும்
அளிபெறு பருவத்திற் கவள்கவன்
றுரைத்தலும்
நாடத் துணிதலு நற்றாய் நயந்தவர்
கூடக் கரையெனக் கொடிக்குறி பார்த்தலும்
சோதிடங் கேட்டலுஞ் சுவடுகண் டறிதலும்
ஏதமுற் றவைகண் டிரங்கி யுரைத்தலும்
வேட்ட மாதரைக் கண்டு வினாவலும்
புறவொடு புலத்தலுங் குரவொடு
வருந்தலும்
திறலருந் தவத்தொடு செல்லா நின்ற
மாவிர தியரை வழியிடை வினாவலும்
வேதியர் தம்மை விரும்பி
வினாதலும்
புணர்ந்துடன் வருவோரைப்
பொருந்தி வினாவலும்
மணந்தரு குழலாள் மன்னிய நிலையொடு
வேங்கை பட்டது கண்டு வியத்தலும்
ஆங்கவ ரியைபணி யவட்கெடுத்
துரைத்தலும்
மீள வுரைத்தலு மீளா தவளுக்
கூழ்முறை யிதுவென வுலகியல்
புரைத்தலும்
அழுங்குதாய்க் குரைத்தலு மாகிய
வெல்லாம்
உழுங்கொலை வேலோ னுடன்போக்கு
விரியே.
என்பது, பருவங்கூறல்,
மகட்பேச்சுரைத்தல், பொன்னணி வுரைத்தல்,
அருவிலையுரைத்தல், அருமை கேட்டழிதல்,
தளர்வறிந் துரைத்தல், குறிப்புரைத்தல்,
அருமையுரைத்தல், ஆதரங்கூறல்,
இறந்துபாடுரைத்தல், கற்புநலனுரைத்தல்,
துணிந்தமைகூறல்,
|