பக்கம் எண் :
 
பொருளதிகாரம்341முத்துவீரியம்

பொலிவழி வுரைத்து வரைவு கடாதல் ஆகிய பதினாறும் வரைவு முடுக்கமாம்.

வருத்தமிகுதி கூறி வரைவுகடாதல்

என்பது, அலரறிவுறுத்த தோழி, அலரானும் காவல் மிகுதியானும் நின்னை
யெதிர்ப்பட மாட்டாதழுது வருந்துவாளிடத்து நின்னருளிருக்கின்றவா றென்னோவெனத்,
தலைமகள் வருத்தங் கூறித், தலைமகனை வரைவுகடாதல்.

(வ-று.)

எழுங்குலை வாழையி னின்கனி தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலிற் றுயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேற்றிருச் சிற்றம்பலவரை யுன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென் னோநின் அருள்வகையே. 

(திருக். 250)

பெரும்பான்மை கூறி மறுத்தல்

என்பது, வரைவுகடாவிய தோழிக்கு, யானவளைத் தெய்வமானுடமென் றறிந்து
வரைந்துகோடற்கு, இக்குன்றிடத்துத் தோன்றா நின்றவிடம் தெய்வ மகளிரிடமோ, அன்றிக்
குறத்தியரிடமோ கூறுவாயாக வெனத், தலைமகன் தலைமகளைப் பெரும்பான்மை கூறி
மறுத்தல்.

(வ-று.)

பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோவன்றி வேழத்தின் என்புநட்ட
குரம்பையர் தம்மிட மோவிடந் தோன்றுமிக் குன்றிடத்தே. (திருக். 251)

உள்ளது கூறிவரைவு கடாதல்

என்பது, பெரும்பான்மை கூறி மறுத்த தலைமகனுக்கு, இவ்விடம் எந்தையது
முற்றூட்டு, எமக்குற்றார் குறவரே, எம்மைப்பெற்றாளுங் கொடிச்சியே, யாங்களும்
புனங்காப்போம் சிலர், நீ வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்துரைக்க
வேண்டுவதில்லை யெனப், பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்களுண்மை கூறல்.