பொருளதிகாரம் | 366 | முத்துவீரியம் |
என்பது, ஓதற்பிரிவு, காவற்பிரிவு,
பகைதணிவினைப்பிரிவு, வேந்தற்
குற்றுழிப்பிரிவு,
பொருள் வயிற்பிரிவு,
பரத்தையிற் பிரிவு என ஆறுவகைப்படும். (3)
26. ஓதற் பிரிவு
என்பது, வரைந்துகொண்ட
பின்னர்த் தலைமகனுக்கு முதற்பிரிவு
ஓதலாதலால்
கல்வியின் மிகுதிகூறி
நீங்காநிற்றல்.
அதன்வகை
856. அவற்றுள்,
கல்விநலங் கூறலும் பிரிவுநினை
வுரைத்தலும்
கலக்கங்கண் டுரைத்தலுங் காதலர்
தமது
வாய்மொழி கூற லாகிய நான்கு
மோதற் பிரிவென வுரைத்திசி
னோரே.
என்பது, கல்வி நலங்கூறல், பிரிவு
நினைவுரைத்தல், கலக்கங் கண்டுரைத்தல்,
காதலர் தமது வாய்மொழி கூறல் ஆகிய நான்கும்
ஓதற் பிரிவாம்.
கல்விநலங் கூறல்
என்பது, வரைந்துகொண்ட
பின்னர், ஓதற்குப் பிரியலுறாநின்ற தலைமகன்,
தலைமகளுக்குப் பிரிவுணர்த்துவானாக, மிகவுங்
கற்றாரே அளவில்லாத பெருமை
யுடையராவரெனத்,
தோழிக்குக் கல்வி நலங் கூறல்.
(வ-று.)
சீரள வில்லாத் திகழ்தரு
கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென் றாரம்
பலத்துணின்ற
ஓரள வில்லா வொருவன் இருங்கழல்
உன்னினர்போல்
ஏரள வில்லா அளவின ராகுவர்
ஏந்திழையே. (திருக். 308)
பிரிவு நினைவுரைத்தல்
என்பது, கல்விநலங் கேட்ட
தோழி, அவன் பிரிதற் குறிப்பறிந்து, மிகவுங்
கற்றோர்
நன்மைக் கெதிரில்லாத
தன்மையராவரென்பதனை யுட்கொண்டு, நின்
புணர்முலையுற்ற
புரவலர், அழற் கானத்தே
போய்க், கல்வியான் மிக்காரைக் கிட்டி,
அவரோடுசாவி,
|