பொருளதிகாரம் | 367 | முத்துவீரியம் |
தங் கல்வி மிகுதி புலப்படுத்தப்
பிரியாநின்றாரெனத், தலைமக னோதுதற்குப்
பிரிவு
நினைந்தமை தலைமகளுக்குக் கூறல்.
(வ-று.)
வீதலுற் றார்தலை மாலையன்
றில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரும் என்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
றார்செல்லன் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற
புரவலரே. (திருக். 309)
கலக்கங் கண்டுரைத்தல்
என்பது, பிரிவு நினைவுரைப்பக்
கேட்ட தலைமகளது கலக்கங்கண்ட தோழி, அன்பர்
சொற்பா விரும்பின ரென்ன, அச்சொல் இவள்
செவிக்கட் காய்ந்த வேல்போலச்
சென்றெய்திற்று, இனி மற்றுள்ள பிரிவை
யெங்ஙனம் ஆற்றுவளெனத் தன்னுள்ளே கூறா
நிற்றல்.
(வ-று.)
கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போலவன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே. (திருக். 310)
வாய்மொழி கூறித்
தலைமகள்வருந்தல்
என்பது, கலக்கங் கண்டுரைத்த
தோழிக்கு, முன்னிலைப் புறமொழியாக,
நின்னிற்
பிரியேன், பிரிவுமாற்றேனென்று
சொன்னவர் தாமே பிரிவராயின், இதற்கு நாம்
சொல்லுவதென்னோவெனத், தலைமகனது வாய்மொழி
கூறித் தலைமகள் வருந்தா நிற்றல்.
(வ-று.)
பிரியா மையுமுயி ரொன்றா
வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையன்மெய்யிற்
பிரியாமை செய்துநின்
றோன்றில்லைப் பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி யென்னாம்
புகல்வதுவே. (திருக். 311) (4)
ஓதற்பிரிவு முற்றும்.
|