பொருளதிகாரம் | 407 | முத்துவீரியம் |
மல்லேம், அவன் வரும்பொழு தெதிர்
தொழுதும், போம்பொழுது புறந்தொழுதும்,
புதல்வனைப் பயந்திருக்கையன்றோ நமக்குக்
கடனாவதெனத், தோழி, தலைமகனதூதிய
மெடுத்துரைத்தவளை யூடறீர்த்தவனோடு பொருந்தச்
செய்யா நிற்றல்.
(வ-று.)
காரணி கற்பகங் கற்றவர்
நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்தஞ் சங்க நிதிவிதிசேர்
ஊருணி யுற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கு மூதியமே.
(திருக். 400) (9)
(கு-ரை.) மணிவாசகர் அருளிய
நூல்கள் இரண்டு. (1) திருவாசகம் (2)
திருக்கோவையார் திருவாசகத்தில் முதற்கண் ‘நமச்சிவாய
வாழ்க’ எனத் தொடங்கி,
இக்கோவையில் ‘யாவர்க்கும்
ஊதியமே’ என நிறைவு பெறுகிறது. எனவே உயிர்களுக்கு
ஊதியம் திருவைந்தெழுத்தே என்பது
புலனாகும்.
கற்பொழுக்கவியல் முற்றும்
பொருளதிகாரம் முற்றும்.
|