யாப்பதிகாரம் | 419 | முத்துவீரியம் |
சீறடிப் பேரகல் அலகு லொல்குபு
இணைமுரண்
தாஅட் டாஅ மரைமல ருழக்கி
இணையளபு. (33)
பொழிப்புத் தொடை
895. பொழிப்பிடை யிட்டுப் போதுவ
தென்ப.
என்பது, முதற்சீர்க்
கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் மோனைமுதலாயின
ஐந்தும்
வருவது பொழிப்புத் தொடையாகும்.
(வ-று.)
அரிக்குரற் கிண்கிணி அரற்றுஞ்
சீறடி
பொழிப்புமோனை
மற்றத னயலே முத்துறழ் மணலே
பொழிப்பியைபு
பன்னருங் கோங்கி னன்னலங்
கவற்றி
பொழிப்பெதுகை
சுருங்கிய நுசுப்பிற் பெருவடந்
தாங்கி
பொழிப்புமுரண்
பூஉக் குவளைப் போஒ தருந்தி
பொழிப்பளபு. (34)
ஒரூஉத் தொடை
896. இருசீ ரிடையிட் டாதியு
மந்தமு
மொன்றி னொரூஉவென் றுரைத்திசி
னோரே.
என்பது, நடுவிருசீர்க்கண்ணுமின்றி
முதற்சீர்க்கண்ணும் ஈற்றுச் சீர்க்கண்ணும்
மோனைமுதலாயின ஐந்தும் வருவது ஒரூஉத்தொடை.
(வ-று.)
அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர்
அகற்றி
ஒரூஉமோனை
நிழலே யினியத னயலது கடலே
ஒரூஉவியைபு
|