பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்450முத்துவீரியம்

‘‘அன்னையையான் நோவ தவமா லணயிழாய்
புன்னையையான் நோவன் புலந்து’’

ஐகாரக் குறுக்கம். (1)

உயிரளபெடை அலகு பெறாமை

963. அளபெடை யாவியு மவற்றோ ரற்றே.

என்பது, உயிரளபெடையும் அலகு காரியம் பெறாவாம்.

(வ-று.)

‘‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோற்றிலவால்-நெல்லுக்கு
நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும்
மாறோமா லன்றளந்த மண்.’’

உயிரளபெடை. (2)

ஆய்தமும் ஒற்றும் அலகு பெறுமிடம்

964. ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
     வேறல கெய்தும் விதியின வாகும்.

என்பது, ஆய்தமும் மெய்யும் அளபெடுப்புழிக்குற்றெழுத்தின் பயத்தவாம்.

(வ-று.)

எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்
வெஃஃகு வார்க்கில்லை வீடு.

ஆய்தம்.

கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு.

மெய் (3)

மொழிமுதற் குறில் தனித்து நின்று அலகு பெறும் இடம்

965. விட்டிசைத் தல்லா விடின்முதற் றனிக்குறில்
     நேரசை யாகா தென்மனார் புலவர்.

என்பது, விட்டிசைத்து நின்றவழியல்லது விட்டிசையாதவழி மொழிமுதற்கணின்ற
தனிக்குறில் நேரசையாகாவாம்.