அணியதிகாரம் | 497 | முத்துவீரியம் |
5. அணியதிகாரம்
சொல்லணியியல்
தற்சிறப்புப் பாயிரம்
1129. சுத்தமெய்ஞ் ஞானச்
சுடர்மணி விளக்கைச்
சித்தம திருத்திச் செப்புவ லணியே.
என்பது, பரிசுத்தமாகிய
மெய்ஞ்ஞான மணிவிளக்கை இதயமலரிலிருத்துதலைச்
செய்து, யான்
அணியிலக்கணத்தைக் கூறுவேன். ஏகார மீற்றசை.
(1)
மறிநிலைப் பொருள்
1130. அக்கர மொழியடி யாவது மாறிப்
புணர்ப்பது மறிநிலைப் பொருளா
கும்மே.
என்பது, எழுத்தாவது, சொல்லாவது,
அடியாவது மாறிப்புணர்வது, மறிநிலைப்
பொருளாகும்.
(வ-று.) ஞிமிறு மிஞிறு.
எழுத்து மாறியது.
சுரையாழ அம்மி மிதப்ப.
சொல் மாறியது.
குடம்பை தனித்தொழியப் புட்பறந்
தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
அடி மாறியது. (2)
அந்தாதி மடக்கு
1131. அந்த முதலாத் தொடுப்பதந்
தாதி
மடக்கா மென்மனார் மறையுணர்ந்
தோரே.
என்பது, இறுதி முதல்வரத்
தொடுப்பது அந்தாதி மடக்காம்.
|