உரையால் அறிவித்தான் - 3-ஆம் வேற்றுமை இச்சொற்குப் பொருளிது - 4-ஆம் வேற்றுமை இச்சொல்லின் அறியலாம் இப்பொருள் - 5-ஆம் வேற்றுமை இவ்வுரையது பெருமைக்கு ஒப்பில்லை - 6-ஆம் வேற்றுமை இச்சொற்கண் இருக்கும் இப்பொருள் - 7-ஆம் வேற்றுமை களி வாராய் - 8-ஆம் வேற்றுமை உண், பார் போன்றவை செயப்படுபொருள் குன்றாவினை (Transitive Verb); நட, வா போன்றன செயப்படுப்பொருள் குன்றியவினை (Intransitive Verb); தேய், பிரி போன்றன செயப்படுப்பொருள் குன்றிய வினையாகவும், குன்றா வினையாகவும் வரும். செல் போன்றன இடங்குன்றாவினை (தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடத்துக்கும் வரும்). பகுதியாக வருவது பகாப்பதமாக இருக்கும்; நடந்தான் என்பதில் நட என்ற பகுதி, பகாப்பதமாக உள்ளது. வை என்பது வைதல், வைத்தல் என்ற இரண்டிற்கும் பகுதியாக இருப்பதால் பல பொருட்கு ஒரு முதனிலை. சொல், பேசு, இயம்பு முதலியன ஒரே பொருளை உணர்த்துவதால் ஒரு பொருட்குப் பல முதனிலை. உதாரணம் முழுமையும் இலக்கணக்கொத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இச்சூத்திரம் இலக்கணக்கொத்து 68, 69, 65, 66 ஆகிய நான்கு சூத்திரங்களின் தழுவலாகும். |