பக்கம் எண் :
 
சுவாமிநாதம்118சொல்லதிகாரம்
 
இடைச்சொற்களின் சில வடிவங்கள் இறுதியில் மாற்றம் பெற்றும் வரும்.
இடைச்சொற்களில் ஏகார இடைநிலை 1. எதிர்மறை, 2. தெளிவு, 3. பிரிவு,
4. எண், 5. வினா, 6. ஈற்றசை என ஆறுபொருளில் வரும். ‘உம்’ என்ற
இடைச்சொல் 1. எதிர்மறை, 2. தேற்றம், 3. பிரிவு, 4. எண், 5. ஐயம், 6.
முற்று, 7. எண், 8. சிறப்பு என்ற எட்டு பொருளையும் ‘மற்று’ என்ற
அசைச்சொல் 1. வேறு, 2. அசைநிலை என்று இரண்டு பொருளையும்
உணர்த்தும்.

     விளக்கம் : ஐ, ஆல், ஓடு என்பன போல்வன வேற்றுமை உருபுகள்.

     அன், இன், வற்று போல்வன சாரியைகள்-வண்டினை (வண்டு+இன்+ஐ),
அதனால் (அது+அன்+ஆல்),

     வி, பி (செய்வி, உண்பி) போன்றவையும் வினைமுற்றில் வரும் அன்,
(வந்தனன்) ஆன், (வந்தான்) போன்றவையும் விகுதிகள்.

     த் (செய்தான்) ட், ற் போன்று இறந்த காலத்தைக் காட்டுவன
இடைநிலைகள்.

     தனக்கென ஒரு பொருள் இல்லாமல் செய்யுளில் ஓசையை
நிறைப்பதற்காக நிற்பது இசைநிறை. ‘ஏயே இவள் ஒருத்தி பேடியோ என்றார்’
என்ற தொடரில் முதலில் உள்ள ஏகாரம் பொருள் இல்லாமல் இசையை
நிறைத்து நிற்கிறது.

     போல, புரைய, ஒப்ப போன்றவை உவம உருபுகள் பொருள் இல்லாமல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது
(அசைத்தல்=சார்த்துதல்) அசைநிலைகளாகும். ‘அது மன் கொண்கன் தேரே’
என்ற தொடரில் மன் என்பது பெயரைச் சார்ந்து பொருளில்லாமல்
இருப்பதால் அது அசைநிலை ஆகும்.

     தமக்கே பொருள் உடையனவாய் வரும் இடைச் சொற்களே ‘தத்தம்
பொருள்கோள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.