பக்கம் எண் :
 
சுவாமிநாதம்49எழுத்ததிகாரம்
 

இன் - வண்டினை (வண்டு + இன் + ஐ)
அத்து - மரத்தை (மரம் + அத்து + ஐ)
நம் - எல்லாநம்மையும் (எல்லாம் + நம் + ஐ + உம்)
தன் - கோவலன் தன்னை (கோவலன் + தன் + ஐ)
உம் - எல்லாரும் (எல்லார் + உம்) ?
ஐ - பண்டைக் காலம் (பண்டு + ஐ + காலம்)
கு - ஆடிக்கு (ஆடி + கு) (இங்கு குகரத்தை நான்காம் வேற்றுமையாக இலக்கண ஆசிரியர்கள் கொள்வதில்லை)
ன - ஆனநெய் (ஆ + ன + நெய்)
அல் - தொடையல் (தொடை + அல்)
     (அல் என்பதற்குப் பொருள் இல்லாததால் சாரியையாகக்
கொள்ளப்பட்டது)

ம - சேரமான் (சேரன் + ம் + ஆன்)
இ -
ஞ - கலைஞன் (கலை + ஞ் + அன்)
ட - மலையாண்டி (மலை + ஆண் + ட் + இ)
ய -
த - புலைத்தி (புலை + த் + இ)
அள் -
அவ் - வானவன் (வான் + அவ் + அன்)
பதமுன் பதம் புணர்தல் பொருட்புணர்ச்சி
          புளி + காய் > புளியங்காய்
பதமுன் உருபு புணர்தல் உருபுப் புணர்ச்சி.
          கல் + ஐ > கல்லை