ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும்
(தொல். வினை.15)
என்பவாகலின்.
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே எனச் செல் என்பது சென்றீ
என ஈகார இடைச்சொன் மிக்கது. அட்டிலோலை தொட்டனை நின்மே
*என நில் என்பது நின்மே என ஏகார விடைச்சொன் மிக்கது.
முன்னிலை முன்ன ரீயு மேயு
மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே
(தொல். எச்ச. 55)
என்றாராகலின்.
எண்டொகை பெறுதலாவது: என என்றும், என்று என்றும், ஒடு
என்றும் தொகை யிடுதல்.
என்று மெனவு மொடுவுந் தோன்றி
யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே
(தொல். இடை. 46)
அவை வருமாறு:
‘கண்ணிமை கைந்நொடி யெனவே'
இஃது என என்று தொகை பெற்றது.
குன்று கூதிர் பண்பு தோழி
விளி யிசை முத்துற ழென்றிவை யெல்லாந்
தெளிய வந்த செந்துறைச் செந்துறை'
இஃது என்று எனத் தொகை பெற்றது.
‘நிலனே நீரே தீயே வளியே,
யாகா யத்தொ டைந்தும் பூதம்'
இதனுள் ஒடு எனத் தொகை பெற்றது. +
இரண்டு பெயரெச்சமும், எட்டு வினையெச்சமும் ஒழித்து
ஒழிந்த
வினைச்சொற்கள் எல்லாம் வினைமுற்றுச்சொல் என்றறிக.
வினைமுற்றுச் சொற்களும் பெயரெச்சச்
சொற்கள் போலப்
பெயர்கொண்டு முடியவும் பெறும்.
வரலாறு: உண்டான் சாத்தன், சாத்தன் உண்டான் எனப்பெயர்
முன்னும் வினை பின்னுங் கொண்டு முடிந்தன; முடிந்தனவே
-------------------------
*நற்றிணை, செ.300. அடி 12.
+யாப்பருங்கலக் காரிகை 9-ஆம் சூத்திர உரையில் காட்டப்பெற்ற மேற்கோள்.
|