பலர் ஏழுவகையான எழுத்துகளை அறிந்து வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர். எழுத்துக்கு இலக்கணம் வகுக்கும் ஆசிரியர்கள் மிகமிகச் சிலரே என்பதால் “அவர் சிலர் உளரே” என்றார். இங்குச் சிலர் என்பதற்கு இலக்கண ஆசிரியருட் சிலர் எனப் பொருள் கொள்ளாமல் எழுத்தறிவுடைய மக்களுட் சிலர் எனக் கோடல் வேண்டும். |
இந்நூற்பா பிறர்கோள் கூறல். இவ்வாசிரியருக்கும் அக்கொள்கை உடன்பாடே என்பது பிற்கூறப்பட்ட இவருடைய சூத்திரங்களாலேயே தெற்றென விளங்கும். |
| “நால்வகை எழுத்தின் நலந்திகழ் ஒலியே | | மற்றைய மூன்று வகையெழுத் தொலியில் | | சிற்சில புணர்ந்து நின்றசீர் ரிவீர்”1 |
|
| “உயிர்வகை ஈராறு ஒற்றுஈ ரொன்பான் | | இவற்றின் புணர்ச்சி இருநூற் றீரெட்டு | | ஆய்தம் ஒன்றுஇவண் ஆய நால்வகை | | எழுத்தும்”2 என்பவை அவை. |
|
இனி இவ்வெழுவகை எழுத்துகளின் எண்ணிக்கை றுகிறார். |
4. | ஆவி ஈராறு ஆய்தம் ஒன்றுஉடல் | | அறுமூன்று உயிர்மெய் யாம்இவை இருநூற்று | | ஒருபதிற் றாறுஅல குடைமை நால்வகை | | கூட்டும் குறிப்பும் குணிக்கரும் விதமே. |
|
உயிர் எழுத்துகள் அகரம் முதல் ஒளகாரம் வரையாகிய பனிரண்டாகும்; ஆய்த எழுத்து ஒன்றே; மெய் எழுத்துகள் க் முதல் ன் முடிய உள்ள பதினெட்டாகும்; உயிர்மெய் எழுத்துகள் ககரமுதல் னௌகாரமீறாகிய இருநூற்றுப் பதினாறு |
|