பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்373
134.யாப்பிலக் கணத்தினை இம்மட்டு அடக்கி
 மற்றோர் இலக்கணம் வகுக்காநா டுதுமே.
யாப்பிலக்கணத்தை இந்த அளவில் நிறைவுசெய்து அடுத்த, இலக்கணம் ஆகிய அணியிலக்கணத்தை வகுத்துக் கூற முற்படுகின்றோம் என்றவாறு.
இந்நூற்பாவால் நான்காவதாகிய யாப்பிலக்கணம் நிறைவு செய்யப்பட்டு ஐந்தாவதாகிய அணியிலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது.
(533)
பனுவ லியல்பு முற்றிற்று.
யாப்பிலக்கணம் முற்றிற்று.
ஆகச் சூத்திரம் 533