கலிவிருத்தம் |
பெறுவது பெறக்கருது பெட்புஉதவும் ஒன்றே ? |
அறுவகை இலக்கணம் அறைந்ததுஅறி வாரை |
மறுஅறு தமிழ்க்கடலும், வானொடுக லந்தே |
உறுவதுஎன் அருட்கடலும் உண்டுகொளும் அன்றே. |
பொதுவாக ஓர் இலக்கண நூலால் ஒரு மாணவன் பெற விழைவதாகிய மொழித்திறத்தின் முட்டறுத்தலாகிய ஒன்றை மட்டுமோ இந்நூலைக் கற்பவன் அடைவான் ? அன்று,. இந்நூலை ஐயந்திரிபறக் கற்று நூல் நுதலிய பொருளை அறிந்தொழுகுவாரைக் குற்றமற்ற செந்தமிழாகிய கடலோடு, சிதாகாசப் பெருவெளியில் கலந்திருக்கக்கூடிய திருவருளாகிய கடலும் தம்முள் ஆழ்த்திக் கொள்ளும். |
தேடிச்சோறு நிதந்தின்று சில சின்னஞ் சிறுகதைகள் பேசித் திரிவதற்குத் தேவையான மிகச் சாதாரண மொழியறிவை ஊட்டி அமைவதோடு தம் நூல் நின்றுவிடாது. ஆயிரங் காலம் அகங்குவிந்து கற்றாலும் பாயிரமும் தீர்வரிய தொன்னூற் பரப்பினையுடைய தமிழ்க்கடலிலேயே முக்குளிக்க வைத்துவிடும் என்றார், மேலும் கல்விப் பயனாகிய தவத்தில் ஈடுபடுத்தி வீட்டின்பத்தையும் நல்கும் என்றும் கூறுகிறார். இதனால் இந்நூல் ஒரு மாணவனைச் சாதாரணமான நிலையில் புலவன் என்ற அளவில் நிறுத்திவிடாமல் இம்மை, மறுமை, அம்மை என்னும் மும்மை இன்பங்களையும் அவனுக்குப் பெற்றுத்தரும் என்பது கருத்து, |
வண்ண விருத்தம் |
(தனதானதத்ததந்த தாத்ததாந்ததய்யதன்ன தனனதானா) |
| மலைதோறும்நிற்கும்எந்தை வேற்கைவேந்தன் வள்ளிமின்னை | | மருவுதோள்வேள் | | மயிலேறிவெற்றிகொண்டு பூட்கைஈந்த செய்யகன்னி | | கணவன் ஆனான் | | இலையூடுவைத்திலங்கு நீற்றைவேண்டும்மெய்யர்தம்மை | | எளிதில்ஆள்சேய் | | எனைஆறிலக்கணங்கள் சாற்றஆண்டுகொள்ளுநன்மை | | திகழ்கையாலே |
|