| இனிதுஅரங் கேற்றி இமையா தாரும் |
| மனிதரும் பிறரும் மகிழச் செய்தனன்; (20) |
| கயல்வளை உகளக் காவி மலர்தரும் |
| வயல்மலி நெல்லை மாநகர் வாழ்அக் |
| கங்கைதன் குலத்தோர் களிப்புறக் கரவாச் |
| செங்கைவான் முகில்நேர் செந்தினா யகவேள் |
| செய்தவப் பயன்எனத் திருஉருக் கொண்டு |
| கைதவம் முழுவதும் கனன்றுமெய்த் துறவுஉற்று |
| எண்ணரும் பெயர்பெற்று எவ்வகை உயிர்க்கும் |
| தண்ணருள் விளைக்கும் தகைமிகப் பெருக்கி |
| அன்பர்கள் அறியும் ஆடல்கள் அனந்தம் |
| முன்புரிந்து இன்னும் முறைப்படி முயன்று (30) |
| பாவால் திருவருட் பரவும் |
| மூவா நலம்புனை முருக தாசனே. |