பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         263

 இஃது எட்டடியால் வந்த பல விகற்பப் பஃறொடை வெண்பா.

[பல விகற்பப் பஃறொடை வெண்பா]

     ‘சிற்றியாறு பாய்ந்தாடும் சேயரி உண்கணாய்
     வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும்
     பற்றார்ப் பிணிக்கும் மதிலும் படுகிடங்கும்
     ஒப்ப உடைத்தாய் ஒலியோவா நீர்ப்புட்கள்
     தத்தி இரைதேரும் தையலாய்! நின்னூர்ப்பேர்
     ஒத்தாய வண்ணம் உரைநீ எனக்கூறக்
     ‘கட்டலர் தாமரையுள் ஏழும், கடுமான்றேர்க்
     கத்திரியருள்ளைந்தும் காயா மரமொன்றும்,
     பெற்றவிழ்தேர்ந் துண்ணாத பேயின் இருந்தலையும்,
     வித்தாத நெல்லின் இறுதியும் கூட்டியக்கால்
     ஒத்தியைந்த தெம்மூர்ப் பெயர்’ என்றாள் வானவன்கை
     விற்பொறித்த வேற்புருவத் தாள்’.

 இது பன்னீரடியாற் பெருவல்லத்தைச் சொன்ன பஃறொடை வெண்பா.

     இன்னும் பல அடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராணசாகரமும் முதலாகவுடைய செய்யுட்களில் கண்டு கொள்க.

     ‘தொடையடி இத்துணை என்னும் வழக்கம்
     உடையதை இன்றி உறுப்பழி வில்லா
     நடையது பஃறொடை நாமம் கொளலே’

 என்றார் காக்கைபாடினியார்.

     ‘தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா’

 என்றார் சிறுகாக்கைபாடினியார்.

     ‘தொடைமிகத் தொடுப்பது பஃறொடை வெண்பா’

 என்றார் அவிநயனார்.

     ‘ஏழடி இறுதி ஈரடி முதலா
     ஏறிய வெள்ளைக் கியைந்தன அடியே
     மிக்கடி வருவது செய்யுட் குரித்தே’.1

 எனவும்,


  1 சங்க யாப்பு : யா. வி. 32. உரைமேற்.