பக்கம் எண் :
 

 264                                   யாப்பருங்கல விருத்தி

     ‘ஆறடி முக்காற் பாட்டெனப் படுமே
     ஏறிய அடியும் செய்யுளுள் வரையார்’.

 எனவும் ஒருசார் ஆசிரியர், சிறப்புடைமை நோக்கி, ‘ஏழடி’ என்று எடுத் தோதினார். அல்லவும் உடம்பட்டார், தொடர் நிலைப்1 பஃறொடை வெண்பாப் பல அடியாலும் வரும் என்று இவ்வாறு சொன்னார் எனக் கொள்க.

     குறள், சிந்து, நேரிசை, இன்னிசை, பஃறொடை என்னும் ஐந்து வெண்பாவும் இனக்குறள் வெண்பா, விகற்பக்குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசை வெண்பா, இரு விகற்ப நேரிசை வெண்பா, ஒரு விகற்ப இன்னிசை வெண்பா, பல விகற்ப இன்னிசை வெண்பா, ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா என்று இவ்வாறு விகற்பிக்கப்பத்தாம். அவை தன்சீர் வெண்டளையாலும், இயற்சீர் வெண்டளையாலும் கூறுபடுப்ப இருபதாம். அவை தன்சீர்ச் சிறப்புடை வெண்டளையாலும் தன்சீர்ச் சிறப்பில் வெண்டளையாலும், இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளையாலும், இயற்சீர்ச் சிறப்பில் வெண்டளையாலும் இவ்வாறு கூறுப்படுப்ப நாற்பதாம். மூன்று செப்பலோசையாலும் பத்து வெண்பாவினையும் உறழ முப்பதாம். ஓசையும் தளையும் கூட்டி உறழ நூற்றிருபதாம். மற்றும் பிற வகையாலும் விகற்பித்து நோக்கப் பலவுமாம்.

[கட்டளைக் கலித்துறை]

     ‘ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
     இன்றி நடப்பினஃ தின்னிசை; துன்னும் அடிபலவாய்ச்
     சென்று நிகழ்வ பஃறொடை யாம்; சிறை வண்டினங்கள்
     துன்றும் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே!’1

 என்னும் இக்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.

[நேரிசை வெண்பா]

     ‘பண்பாய்ந்த ஏழு பதினா றிழிபுயர்வா
     வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின்


  1 யா. கா. 25.                           பி - ம்.1 தொடை நிலை.