பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           399

     ‘வாக்கு முகந்தேன் மலர்க்கமலம்; வண்குவளைப்
     பூக்குரும்பை வேய்கண் புணர்முலைதோள்; - நோக்கல்குல்
     மான்றேர்; மயிந்தன் மணியருவி வேங்கடத்துத்
     தேன்றேர் குறவர் மகட்கு’.

 எனவும்,

     ‘பூமலை நீர்உறையுள்; புள்ஏறு புள்கொடி;
     வாய்மைவேல் ஆழி படைக்கலம்; - நாமம்
     பிரமன் இறைக்கண்ணன்; பொன்தீக்கார் மேனி;
     கருமம் படைப்பழிப்புக் காப்பு’.

 எனவும்,

     ‘காமவிதி கண்முகம்; மென்மருங்குல் செய்யவாய்
     தோமில் துகடினி; சொல்லமுதம்;-தேமலர்க்
     காந்தள் குரும்பை கனகம் மடவாள்கை
     ஏந்திளங் கொங்கை எழில்’.

 எனவும் கொள்க [இஃது எழுத்து மாறு நிரல்நிறை]. இஃது எழுத்தாற் கொள்ளுமா: ‘காவி கண்’ என்றும், ‘மதி முகம்’ என்றும், ‘துடி மருங்குல்’ என்றும், ‘கனி வாய்’ என்றும் விடுக்க.

 இனி, வினை நிரல்நிறை வருமாறு:

[இன்னிசை வெண்பா]

     ‘அடல்வேல் அமர்நோக்கி நின்முகம் கண்டே
     உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
     கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும்
     தடமதியம் ஆம்என்று தாம்’.1

 எனவும்,

[நேரிசை வெண்பா]

     ‘காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
     போதுசேர் தார்மார்ப! போர்ச்செழிய! - நீதியால்
     மண்அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை ஏற்றார்க்கு
     நுண்ணிய வாய பொருள்’.

 எனவும்,


  1 யா. வி. 51 உரைமேற். தொல். பொ. 403 உரைமேற்.  பி - ம். 1மாவிதழ்க்