பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           487

[நேரிசை வெண்பா]

     ‘பாதிரி இன்புளி மாப்பாய் விறகுதீப்
     போதுபூப் போரேறு பூமருது - கோதில்
     கடியா றெனவேழும் மூவெழுத்துச் சீராய்
     அடியாகும் என்றுரைத்தார் ஆய்ந்து’.

 என்பவாகலின்.

     அவற்றுள், ‘போதுபூ, விறகுதீ, கடியாறு’ என்னும் இம் மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடிகாறும் உயர்ந்த பன்னி ரண்டடியும் பெற, மூன்றுமாய் முப்பத்தாறாம்.

     என்னை?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]

     ‘போதுபூக் கோதில் விறகுதீப் பூங்கடியா
     றேழாதி ஈரொன்பான் ஏற ஒரோவொன்றிற்
     காகுமுப் பன்னீ ரடி’.

 என்பவாகலின்.

     இனி ‘பாதிரி, புளிமா, போரேறு, பூமருது’ என்னும் நான்கு சீரும்  ஆறெழுத்தடி முதலாகப் பதினெட் டெழுத் தடிகாறும் உயர்ந்த பதின் மூன்றடியும் பெற, நான்குமாய் ஐம்பத்திரண்டு் அடியாம்.

     என்னை?

[குறள் வெண்பா]

     ‘ஏனை ஒருநான்கும் ஆறாதி ஈரொன்பான்
     ஏறுதலால் ஐம்பத் திரண்டு’.

 என்பவாகலின்.

    மேற்சொன்ன முப்பத்தாறும், இவை ஐம்பத்திரண்டும் தலைப் பெய்ய,  மூவெழுத்துச் சீராயவழி, ஆசிரிய அடித்தொகை எண்பத்தெட்டு.

     என்னை?