பக்கம் எண் :
 

 உறுப்பியல் 'குறினெடிலாவி'

15

 
'(14) வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும்
உகர மரையாம் யகரமோ டியையின்
இகரங் குறுகு மென்மனார் புலவர்'
'யகரம் வரும்வழி யிகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது'
 
என்றார் ஆகலின்.
 

(தொல். எழுத். சூ. 410.)
 

வரலாறு

     நாகியாது, காசியாது, காடியாது, காதியாது, காபியாது, காறியாது என வரும். (15)
ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.
 
     10 இனி உகரம் திரியாது வந்த குற்றியலிகரம் : மியாவென்னும் முன்னிலை யசைச்
சொல்லின் கண் மகரம் ஊர்ந்து நின்ற இகரம் குற்றியலிகரமென்று வழங்கப்படும் எ-று.
என்னை?
 
  'குற்றிய லிகர நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வரூஉ மகர மூர்ந்தே'
 
என்றார் ஆகலின்
 

(தொல். எழுத். 34.)
 

வரலாறு
 

  கேண்மியா, சென்மியா எனக் கொள்க.
இனி ஐகாரக் குறுக்கத்திற்குச் சொல்லுமாறு.
 
     அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற்கண்ணும் இன்றி  11 அல்லாத வழி
வந்த ஐகாரம் தன்னளவிற் சுருங்கி (16) ஒன்றரை  12 மாத்திரையும் ஒரு
மாத்திரையுமாகக் குறுகும்: 13 ஐகாரம் குறுகுமிடத்து முதலிடை கடையென்னும்
மூவிடத்தும் குறுகும். என்னை?
 

     (14) இஃது அவிநயச் சூத்திரம் என்பர் : யா. வி. 2. உரை.

     (15) 'ஒழிந்தனவும்' என்றது ஏழு குற்றுகரங்களில் இங்கே காட்டிய நெடிற்கீழ்
உகரங்கள் ஒழிந்த ஏனைய ஆறன்முன் யகரம் வந்து இகரமாகத் திரிந்த உகரங்கள்.

     (16) நன்னூலார் ஐகாரக் குறுக்கத்துக்கு மாத்திரை ஒன்று என்பர். சூ. 99.
 

     (பி - ம்) 10. இனித் திரியாது வந்த குற்றியலிகரம் வருமாறு.
11. யொழிந்த. 12. மாத்திரையாய்க் குறுகும். 13. அவை குறுகு.