காப்பு என்பது
- தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர்
துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், கூகை குழறல், கோழி
குரற்காட்டல் என இவை.
மிகுதல் என்பது பெருகுதல்: அஃது ஒன்று பன்னாளும்
வருதலும்,
பல மயங்கி வருதலும், முறையாற்றோன்றி வருதலும் என இத்திறத்தான்
ஆம் என்பது.
அவற்றுள், தாய் துஞ்சாமை என்பது
- இரவுக்குறி வந்து
ஒழுகாநின்ற காலத்து ஒருநாள் தாய் கண்படாளாகி, மகளை அறிவும்
ஆசாரமும் கற்பித்தற்பொருட்டாக இருக்கும்; இருந்தக்கால் அதுவும்
இடையீடாம் என்பது.
நாய் துஞ்சாமை என்பது
- வழியறி ஞமலி பட்டதற்கெல்லாம்
எப்பொழுதுங் குரைத்தக்கால் அதுவும் ஆகாது என்றவாறு.
என்னைகொல்லோ இவ்விடத்துப் பல்காற் குரையா நின்றது என ஆராய்ச்சி
வரும், அதனால் இடையீடாம் என்பது.
ஊர் துஞ்சாமை என்பது
- ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க்
கண்படை யில்லையாமாக, அதுவும் இடையீடாம் என்பது. அவை, மதுரை
ஆவணியவிட்டமே, உறையூர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே
என இவைபோல்வன. பிறவும் எல்லாம் அப் பெற்றியானபொழுதும்
இடையீடாம் என்பது.
காலவர் கடுகுதல் என்பது
- காவலர் என்பார் காப்பாளர்,
ஊர்காத்தல் இடங்காத்தல் என இவற்றைக் கடிது காத்தும் என்று, காவலாளர்
ஏமஞ்சூழ்ந்து கைவிளக்கினொடு திரிதருவாரன்றே, அப்பெற்றியானபொழுதும்
இடையீடாம் என்பது.
நிலவு வெளிப்படுதல் என்பது
- நிலாப் பகல்போலும் பெற்றித்தாய்
ஞாயிறு பட்டவாறே எழுந்து, ஞாயிறு எழுந்துணையும் விளக்கினஞான்றும்
இடையீடாம் என்பது.
பிறவும் அன்ன; இவற்றுக் கெல்லாம்,
‘காம மிக்க கழிபடர் கிளவி’
(இறையனார்-30)
என்னுஞ் சூத்திரத்துட் செய்யுள் காட்டுதும்.
‘வரைவிடை வைத்த காலை யான’ என்பதே சூத்திரமாகின்,
காப்புமிகினும், வரைவிடை வைத்த காலையும் களவினுள் இடையீடாம்
என்பது பொருந்தாது, வரைவிடைக் காப்புமிகினும் இடையீடாம் என்பதன்றி
யெனின், அஃதே வரைவிடை வைத்த காலை யானும் என்னும் உம்மை
ஈறுதிரிந்து, ‘வரைவிடை
|