ஆயினும் இந்நால்வகைச்சொற்களை ஒவ்வோரோத்தாக விளக்காமுன்னர், இச்சூத்திரத்தில் இயற்சொன்முதலாகச் சாரியை யீறாகக்காட்டிய பன்னிரு தகுதிச் சொற்பொதுமையவாகையிற் பொதுவியலென ஒரோத்தாதியிற் கூட்டி இவ்வதிகாரம் ஐந்தோத்தாகப் பிரிக்கப்படு மெனக் கொள்க.எ-று. (2) | 43. | இயற்சொல்லென்ப தியல்பிற்றிரிபிலா தானெளிதெவர்க்குந் தன்பொருள்விளக்கலே. | | (இ-ள்.) இயற்சொல்லாமா றுணர்த்துதும், மொழியானும் பொருளா னுந்திரிபின்றி எவர்க்குந் தன்பொருளைக் காட்டி விளக்குதற்கு இயல்பினை யுடையசொல் இயற்சொல்லாகும். (உ-ம்.) அவன், அவள், அவர், அது, அவை, மகன், மகள், பொன், மணி, இவை பொருளால் வரு பெயரியற் சொல். நிலம், மலை, யாறு, கடல், இவை இடத்தால் வரு பெயரியற் சொல். இன்று, நாளை, பண்டு, மேல், இவை காலத்தால் வரு பெயரியற் சொல். தலை, முகம், கொம்பு, மலர், இவை சினையால் வரு பெயரியற் சொல். வட்டம், சதுரம், செம்மை, வெண்மை, இவை குணத்தால்வரு பெயரியற்சொல். ஆடல், பாடல், நிற்றல், நீங்கல், இவைதொழிலால் வரு பெயரியற்சொல். அன்றியும், இயற்சொல் நால்வகையென்பர். (உ-ம்.) மண், மரம், இவை பெயரியற்சொல். உண்டான், உறங்கினான், இவை வினையியற்சொல். அவனை, அவனால், இவை இடையியற் சொல். அன்பு, அழகு, இவை உரியியற்சொல். பிறவுமன்ன. எ-று. (3) | 44. | திரிசொல்லொருபொருட் டெரிபலசொல்லும் பலபொருட்கொருசொல்லும் பயன்படற்குரியன. | | (இ-ள்.) திரிசொல்லாமா றுணர்த்துதும். பலசொல்லாகி ஒருபொருளை விளக்குவனவும், ஒரு சொல்லாகிப் பலபொருளை விளக்குவனவுந் திரிசொல் லெனப்படும். (உ-ம்.) வெற்பு, விலங்கல், விண்டு, அடுக்கல், பொறை, வரை, குன்று, பிறவும், பலசொல்லாகி மலை எனும் ஒரு பொருளைவிளக்குந் திரிசொல். ஒடை, எ-து. ஒருசொல்லாகி யானைப்பட்டம், எ-ம். ஒருமரம், எ-ம். ஒருகொடி, எ-ம். நீர்நிலை, எ-ம். பலபொருளைவிளக்குந் திரிசொல். அன்றியும், திரிசொல் நால்வகையென்பர். (உ-ம்.) கிள்ளை, சுகம், தத்தை, இவை கிளி என்கிற ஒருபொருள்குறித்த பலபெயர்த்திரிசொல். வாரணம், இது யானையுங் கோழியுஞ் சங்குமுதலாகிய பல பொருள்குறித்த ஒரு பெயர்த்திரிசொல். படர்ந்தான், சென்றான், இவை போயினான் என்கிற ஒருபொருள்குறித்த பலவினைத்திரிசொல். வரைந்தான், இது நீக்கினான், கொண்டான், என்கிற பலபொருள் குறித்த ஒருவினைத் திரிசொல். சேறும், வருதும், இவற்றினுடைய றும் தும், விகுதிகள் |
|
|