இப்பூவுலகமாயையுட்படா தெக்காலத்துந் தவிராமெய்ப் பொருளாகவும், கலப்புமின்றி பிரிப்புமின்றி நலமெலாமொன்றென வியல்பாகக்கொண்டு பகாப் பொருளாகவும், வேதநூலைத்தந்த முதல்வனாகவும், வேதநூலாலடையப்படு முதற்பொருளே யாகவும், நிற்குமப் பொருளாகிய மெய்யங் கடவுளை மனவணியாகவேத்திப் பொருளதிலக்கணத்தைக் கூறுதும். ஆகையில் இவ்வதிகாரம் வழுவொன்றின்றி முடிப்பது வேண்டி யீண்டுந் தெய்வ வணக்கமுரைத்த முறையைக்காண்க. எ-று. (1) | 144. | பொருணூ லென்பது புகல்பொரு ணுதலிய வுரிப்பயன் படுத்துமா றுணர்த்து நூலே. | | (இ-ள்.) இவ்வதிகாரம் பொருணூலினிலக்கணத்தை யுணர்த்துவதா கையி னிச்சூத்திரத்தின்கண்ணே பொருணூலாவதிஃதெனக் காட்டுதும். இங்ஙனம்பொருளெனப் படுவதுதான் விரித்துரைப்பானெடுத்த பொருளைப்பயன்படக்கூறும்படியைக்காட்டு நூலேயெனக்கண்டுணர்க. ஆகையாற் புலவராலுரைக்கத் தகும்பொருளாவன:- அறம், பொருள், இன்பம், வீடு, என நான்கு, இவற்றுட் பொருணூற்றந்த செந்தமிழுணர்ந்தோர் மற்றை யாவுமொழிய அகப்பொருளெனச் சிற்றின்பமொன்றையும் புறப்பொருளெனப் படைச்சேவகமொன்றையும் விரித்துரைத்தார். அங்ஙனம் பொதுப்படாதுரைத்தநூல் சிறுபான்மையாகையின் இங்ஙனம் அறமுதனான்கிற் கேற்பப்பொது நூலாகவிவ்வதிகார முடியுமெனவே கொள்க. (2) | 145. | வழக்குத் தேற்றந் தோற்ற மெனவிம் மூவகைப் படுமா மொழியும் பொருளே. | | (இ-ள்.) பொருட்கூறுபாடா மாறுணர்த்துதும். கற்றோர் பிறர்பயன் பட விரித்துரைக்கத்தகும் பொருளெல்லாம் வழக்கும், தேற்றமும், தோற்றம், என விம்மூன்று வகையு ளடங்கும். இவையே ஒழுக்கம், வழக்கு, தண்டம், எ-ம். கூறுவர். வடநூலார் ஆசாரம், விவகாரம், பிராய்ச்சித்தம், எ-ம். கூறுவர். எ-று. (3) | 146. | நீதி வழங்கலு நிலைபெறத் துணிதலுந் தீதென நன்றெனத் தெளிதலு மிவைவழக் காதி முப்பொருட் காகும் பயனே. | | (இ-ள்.) கூறிய மூவகைப் பொருட்குப் பயனை யுணர்த்துதும், அவற்றுள் வழக்குப்பயனாவது:- முன் யாதொருவன் செய்தவை நீதிநூலிற்கேலாதன வென்பதாயினு மேற்பன வென்பதாயினும் வழக்குமுறையிற் காட்டியதனுள் குற்றந் தோற்றலுங் குற்றங்காத்தலுமென விருவகைவழக் கென்றவாறு. அங்ஙனம் அஞ்சியோடினாரைத் தொடர்ந்துயிர் செகுத்தலீன |
|
|